AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அஞ்சான் படத்தைக் குறை கூறவே பலர் காத்திருந்தனர் – இயக்குநர் லிங்குசாமி

Director Lingusamy talks about Anjaan movie flop | நடிகர் சூர்யா நடிப்பில் ரசிகர்கள் முன்னதாக திரையரங்குகளில் வெளியாகி தோல்வியை சந்தித்த அஞ்சான் படம் குறித்து இயக்குநர் லிங்குசாமி சமீபத்திய பேட்டியில் விளக்கம் அளித்தது இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

அஞ்சான் படத்தைக் குறை கூறவே பலர் காத்திருந்தனர் – இயக்குநர் லிங்குசாமி
அஞ்சான்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 07 Jul 2026 15:25 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் லிங்குசாமி. ஆனந்தம் என்ற ஒரு சூப்பரான ஃபேமிலி செண்டிமெண்ட் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனவர் இயக்குநர் லிங்குசாமி. இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான படங்கள் பல ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஃபேமிலி செண்டிமெண்ட், ரொமாண்டிக் மற்றும் ஆக்‌ஷன், காமெடி என பல ஜானர்களில் படங்களை இயக்கி வந்த இயக்குநர் லிங்கு சாமி ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் தொடர்ந்து தமிழ் சினிமாவில் படங்களை தயாரித்தும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குநர் லிங்குசாமி சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் இயக்கிய படங்கள் மற்றும் நடிகர்கள், இயக்க நினைத்த நடிகர்கள் என பல சுவாரஸ்யமான விசயங்களை வெளிப்படையாக தெரிவித்து வருகிறார். அந்த வகையில் அவர் அஞ்சான் படம் தோல்வியை சந்திக்க என்ன காரணம் என்பது குறித்து வெளிப்படையாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அஞ்சான் படத்தைக் குறை கூறவே பலர் காத்திருந்தனர்:

நான் தொடர் வெற்றிகளை ருசித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் அஞ்சான்’படம் வெளியானது. அதைவிட முக்கியமாக, கோலி சோடா, மஞ்சப்பை, சதுரங்க வேட்டை, கும்கி ஆகிய படங்களின் மூலம் எனது தயாரிப்பு நிறுவனம் ஒரு வெற்றிப் பாதையில் பயணித்துக்கொண்டிருந்தது. அது நான் கற்பனை செய்ததை விடவும் பெரியதாக வளர்ந்து வந்தது. பையா மற்றும் வேட்டை போன்ற வெற்றிப் படங்களையும் நான் இயக்கியிருந்தேன்.

திரைத்துறையில் சிலருக்கு என் மீது பொறாமை இருந்தது. அதைத் தவிர்க்க முடியாது. அஞ்சான் படத்திற்கு அளிக்கப்பட்ட அதீத விளம்பரங்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் காரணமாகச் சிலருக்குக் கோபமும் இருந்தது. இது படத்திற்கு எதிர்பாராத ஒரு சவாலாக அமைந்தது. அந்தப் புகழ்பெற்ற மொத்த வித்தையையும் இறக்கிட்டான் என்ற வசனம், சன் டிவியில் நான் பல ஆண்டுகளுக்கு முன்பு அளித்த ஒரு நேர்காணலிலிருந்து எடுக்கப்பட்டது. மக்கள் அப்படத்தை விமர்சிக்கக் காத்திருந்தனர்.

அப்படம் ரன் படத்தைப் போல அமைந்திருந்தால், மற்ற தடைகள் எதுவாக இருந்தாலும் அது வெற்றி பெற்றிருக்கும். எங்கள் தரப்பிலும் ஒரு தவறு நடந்தது. அதனால்தான் படத்தை மீண்டும் எடிட் செய்து, புதிய முறையில் வெளியிட்டோம். ஆனால், அது அவ்வளவு பெரிய தவறு அல்ல. இருப்பினும், பொறாமை மற்றும் பிற காரணிகள் அனைத்தும் ஒன்றிணைந்ததால், அது மிகப்பரிய பிரச்சினையாகச் சித்தரிக்கப்பட்டது. அந்தச் சூழலிலிருந்து மீண்டு வரவும், நான் செய்த தவறை ஏற்றுக்கொள்ளவும் எனக்கு நீண்ட காலம் பிடித்தது. ஆனால் இப்போது என்னால் அத்தகைய சூழ்நிலைகளைத் தாங்கிக்கொள்ள முடிகிறது என்று லிங்குசாமி தெரிவித்து இருந்தார்.

Also Read… வாட்ஸ் ஆப் DP-யை மாற்றி வலை.. நடிகர் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் மோசடி முயற்சி!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ஜன நாயகன் படத்திற்கு எப்போது சென்சார் சான்றிதழ் கிடைக்கும்? வைரலாகும் தகவல்

Follow Us