Naga Vamsi: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஸ்டைலான தோற்றம் இருக்கும் – தயாரிப்பாளர் நாக வம்சி பேச்சு!
Naga Vamsi About Suriya: தெலுங்கு தயாரிப்பாளரான நாக வம்சியின் தயாரிப்பில் மற்றும் சூர்யாவின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள படம்தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்த படத்தில் சூர்யாவின் லுக் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து தயாரிப்பாளர் நாக வம்சி தெரிவித்துள்ளார்.
கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக இருந்துவருபவர் சூர்யா (Suriya). இவர் தமிழில் தொடர்ந்து பிரம்மாண்ட படங்களில் நடித்து அசத்தியுள்ளார். அந்த வகையில் இவர் தற்போது தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நாயகனாக நடிக்க தொடங்கியிருக்குறார். தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டேர்டைமெண்ட்ஸ் மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரி (Venky Atluri) இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள புது படம்தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath and Sons). இந்த படமானது முழுவதுமாக தெலுங்கு மற்றும் தமிழ் போன்ற மொழிகளை மையமாக வைத்து இயக்கப்பட்டுள்ளது. இதில் சூர்யா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார்.
மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில், இப்படமானது 2026ம் ஆண்டு ஆக்ஸட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் நாக வம்சி, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் சூர்யாவின் ஸ்டைல் குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: சூர்யா – தனுஷ் ரசிகர்களுக்கு அவர்களின் பிறந்த நாளில் காத்திருக்கும் ட்ரீட்… வைரலாகும் தகவல்
சூர்யாவின் ஸ்டைல் குறித்து பகிர்ந்த தயாரிப்பாளர் நாக வம்சி:
அந்த பேட்டியில் பேசிய நாக வம்சி, “விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் கதையானது ஒரு 40 வயது திருமணமாகாத ஆணுக்கும், 20 வயதுடைய பெண்ணுக்கும் இடையே மலரும் காதல் கதையை மையமாக கொண்ட ஒரு கமர்ஷியல் குடும்ப பொழுதுபோக்கு படமாகும். இப்படத்தில் சூர்யா, கஜினி பட சஞ்சய் ராமசாமியை நினைவூட்டும் தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவரின் கதாபாத்திரமும் மிகவும் ஸ்டைலான கதாபாத்திரமாக இருக்கும்” என அதில் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: என்ன அடைச்சி வெச்சி கொடும படுத்துறாங்க… பிக் பாஸ் வாட்டர்மெலான் ஸ்டார் திவாகர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் குறித்து தயாரிப்பாளர் நாக வம்சி வெளியிட்ட பதிவு:
Dear Anbaana Fans, here’s our little note to keep the celebrations going ❤️
Make way for #VishwanathAndSons 😎
Arriving to conquer cinemas worldwide on AUGUST 14th, 2026 🔥#VASonAUG14th @Suriya_offl #VenkyAtluri @_mamithabaiju @realradikaa @TandonRaveena @gvprakash… pic.twitter.com/Qdch5LP5nw— Naga Vamsi (@vamsi84) May 28, 2026
இப்படத்தில் சூர்யாவுடன் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா டாண்டன், ஜார்ஜ் மரியான், நாசர், பவானிஸ்ரீ, காளிதாஸ் போன்ற பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது பேமிலி பொழுதுபோக்கு கதைக்களத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில், 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக தயாராகியுள்ளது.