AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Naga Vamsi: காட் ஆப் வார் படம் குறித்து எதுவும் தெரியாது – தயாரிப்பாளர் நாக வம்சி ஓபன் டாக்!

Naga Vamsi About God Of War Movie: தமிழ் கடவுள் முருகப் பெருமானின் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்படவுள்ள ஆக்ஷன் படம்தான் காட் ஆஃப் வார். இதை இயக்குநர் திரிவிக்ரம் இயக்க ஜூனியர் என்டிஆர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தை குறித்த கேள்விக்கு, தயாரிப்பாளர் நாக வம்சி சொன்ன பதிலை விவரமாக பார்க்கலாம்.

Naga Vamsi: காட் ஆப் வார் படம் குறித்து எதுவும் தெரியாது – தயாரிப்பாளர் நாக வம்சி ஓபன் டாக்!
காட் ஆஃப் வார் திரைப்படம் பற்றி நாக வம்சிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 06 Jul 2026 15:02 PM IST

தெலுங்கு சினிமாவில் உச்ச நாயகனாக இருந்துவருபவர் நடிகர் ஜூனியர் என்டிஆர் (Jr.NTR). இவரின் நடிப்பில் தொடர்ந்து பல பான் இந்திய படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் வார் 2 (War 2). இப்படத்தில் நடிகர் ஹ்ரித்திக் ரோஷனுடன் இணைந்து நடித்திருந்த நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. தற்போது நடிகர் ஜூனியர் என்டிஆர், இயக்குநர் பிரஷாந்த் நீல் (Prashanth Neel) இயக்கத்தில், டிராகன் (Dragon) என்ற அதிரடி ஆக்ஷன் படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தினை அடுத்ததாக இயக்குநர் திரிவிக்ரம் (Trivikram) இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் ஒப்பந்தமாகியுள்ள படம்தான் காட் ஆஃப் வார் (God Of War).

இப்படத்தை சித்தாரா எண்டெர்டைமெண்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளார் நாக வம்சி தயாரிக்கவுள்ளார். இப்படமானது தமிழ் கடவுளான முருகப்பெருமானை மையமாக கொண்டு உருவாக்கவுள்ளது. இந்த படத்தின் அறிவிப்பின்போதே, கடவுள் முருகன் வடக்கில் பிறந்தவர் என வசங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில், பேசிய தயாரிப்பாளர் நாக வம்சி காட் ஆஃப் வார் படம் பற்றி பேசியுள்ளார்.

இதையும் படிங்க: முருகன் வடக்கே பிறந்தவரா? ஜூனியர் என்டிஆர் படத்துக்கு சீமான் எச்சரிக்கை

காட் ஆஃப் வார் படம் குறித்து தயாரிப்பாளர் நாக வம்சி பகிர்ந்த விஷயம்:

சமீபத்தில் நேர்காணலில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் நாக வம்சியிடம், தொகுப்பாளர் “ஜூனியர் என்டிஆர் மற்றும் திரிவிக்ரம் கூட்டணி படம் பற்றி எதாவது சொல்ல முடியுமா?” என கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த நாக வம்சி, “உண்மையை சொல்லப்போனால் சார், எனக்கு காட் ஆஃப் வார் திரைப்படம் பற்றி எதுவுமே தெரியாது” என அதில் அவர் கூறியிருந்தார். தற்போது இதுகுறித்த தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: கங்குவா படத்தின் தோல்வி… இயக்குநர் சிறுத்தை சிவா செய்த செயல்… புகழ்ந்து பேசிய தயாரிப்பாளர்

காட் ஆஃப் வார் திரைப்படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இப்படத்தை இயக்குநர் திரிவிக்ரம் இயக்க, ஜூனியர் என்டிஆர் நாயகனாக நடிக்கவுள்ளார். மேலும் இப்படத்திற்கு தமிழ் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கும் நிலையில், சித்தாரா எண்டெர்டைமென்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் அறிவிப்பின்போதே, இதன் மீது அதிகம் விமர்சனங்கள் இருந்தது. “வடக்கில் பிறந்தவர், ஆனால் தெற்கில் வழிபடக்கூடியவர்” என வசனங்கள் இந்தியில் இடம்பெற்றிருந்த நிலையில், ஒட்டுமொத்த தமிழ் மக்கள் மற்றும் முருக பக்தர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்க்கு பலரும் எச்சரிக்கை விடுத்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us