Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Jr.NTR: ஜூனியர் என்.டி.ஆரின் புதிய திரைப்படம்.. வெளியான தரமான அப்டேட்!

NTR x NEEL Movie Update : தென்னிந்தியப் பிரபல நடிகர்களில் ஒருவர் நடிகர் ஜூனியர் என்டிஆர். இவரின் முன்னணி நடிப்பில் இறுதியாகத் தேவரா திரைப்படம் வெளியாகிய நிலையில், இந்த படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்துள்ளார். தற்போது அந்த படத்தில் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

Jr.NTR: ஜூனியர் என்.டி.ஆரின் புதிய திரைப்படம்.. வெளியான தரமான அப்டேட்!
ஜூனியர் என்டிஆர் மற்றும் பிரசாந்த் நீல்Image Source: Social media
barath-murugan
Barath Murugan | Published: 10 Apr 2025 16:56 PM

டோலிவுட் சினிமாவில் பிரபல நாயகனாக வலம்வருபவர் ஜூனியர் என்டிஆர் ( Jr NTR) . இவரின் முன்னணி நடிப்பில் இறுதியாக தேவரா பாகம் 1 (Devara part 1)  திரைப்படம் வெளியாகியிருந்தது. இயக்குநர் கொரட்டால சிவாவின் (Korattala Siva)  இயக்கத்தில் வெளியான இப்படமானது, பான் இந்தியா அளவிற்குப் பிரபலமானது. இந்த படத்தின் கதைக்களம் மீது பல விமர்சனங்கள் எழுந்தாலும், பாடல்கள் மக்களிடையே மிகவும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாக நடிகை ஜான்வி கபூர் (Janhvi Kapoor) நடித்திருந்தார். கடல் மற்றும் அதைச் சார்ந்து இருக்கும் மக்களிடையே ஏற்படும் பிரச்சனைகள் போன்ற கதைக்களத்துடன் வெளியாகி இந்த படமானது வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தைத் தொடர்ந்து வார் 2 மற்றும் NTR X NEEL போன்ற திரைப்படங்களில் கமிட்டாகியுள்ளார்.

இதை தற்போது இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகவுள்ள “NTR X NEEL” படத்திலிருந்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகர் ஜூனியர் என்டிஆர் வரும் 2025, ஏப்ரல் 22ம் தேதியில் இந்த புதிய படத்தின் ஷூட்டிங்கில் இணையவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இயக்குநர் பிரசாந்த் நீலின் இப்படத்தின் அறிவிப்புகள் தற்போது இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.

NTRXNEEL படக்குழு வெளியிட்ட அறிவிப்பு :

நடிகர் ஜூனியர் என்டிஆரின் புதிய படத்தை இயக்குநர் வேறு யாருமில்லை, நடிகர் யாஷின் நடிப்பில் வெளியான கேஜிஃஎப் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் நீல்தான். இவர் கேஜிஃஎப் 2 திரைப்படத்தைத் தொடர்ந்து, ஜூனியர் என்டிஆரின், புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆரிற்கு ஜோடியாக நடிகை ருக்மிணி வசந்த் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இவர் தமிழில் மதராஸி மற்றும் ஏஸ் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில், மாஸான கதைக்களத்தில் உருவாக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தைப் பிரபல புஷ்பா திரைப்படத்தைத் தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமானது தயாரிக்கவுள்ளது. இந்த படமானது பான் இந்திய திரைப்படமாக அமையும் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் மேலும் சில முக்கிய பிரபலங்கள் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல்கள் குறித்தான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. தற்போது நடிகர் ஜூனியர் என்டிஆர் வார் 2 திரைப்படத்திலும் கமிட்டாகியுள்ள நிலையில், இந்த NTRXNEEL திரைப்படத்தில் வரும் 2025, ஏப்ரல் 22ம் தேதியில் இப்படத்தின் ஷூட்டிங்கில் இணைவார் என்று படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இப்படத்தில் இசையமைப்பாளர் யார், இதர நடிகர்கள் யார் யார் எனத் தொடர்ந்து இப்படத்தின் அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.