2025ல் முதல் பாதி கடந்தது.. 2ம் பாதியில் எதிர்பார்ப்புகளுடன் ரிலீசிற்கு காத்திருக்கும் படங்களின் லிஸ்ட்!
Top 5 Most Anticipated Tamil Films Second Half Of 2025 Year : தமிழ் சினிமாவில் 2025ம் ஆண்டில் முதல் பாதி கடந்துள்ள நிலையில், அடுத்த அரையாண்டில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் நடிகர்களின் படங்கள் என்னவென்று வரிசையாக பார்க்கலாம். மேலும் அப்படங்கள் எப்போது வெளியாகிறது என்பதைப் பற்றியும் பார்க்கலாம்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் (Lokesh Kanagaraj) இயக்கத்தில், ரஜினிகாந்த் (Rajinikanth) முன்னணி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் கூலி (Coolie). இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அதிரடி ஆக்ஷ்ன் நாயகனாகவே நடித்துள்ளார். இப்படமானது ரஜினிகாந்த்தின் 171வது திரைப்படமாக உருவாகியுள்ளது. மேலும் அவரின் மகள் கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன் (Shruti Haasan) நடித்துள்ளார். இவர்களுடன் இப்படத்தில் நடிகர்கள் ஷோபின் ஷாஹிர், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ் மற்றும் அமீர்கான் இணைந்து நடித்திருக்கின்றனர்.
லோகேஷ் கனகராஜின் இயக்கமும் , மற்றும் ரஜினிகாந்த்தின் நடிப்பிலும் இப்படமானது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் வெளியாகிறது. இந்த 2025ம் ஆண்டு இரண்டாம் பாதியில் வெளியாகும் முதல் பிக் பட்ஜெட் படமாக இது அமைந்துள்ளது.
மதராஸி :
சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் படம்தான் மதராஸி. இதை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயனின் 23வது திரைப்படமாக உருவாகியிருக்கும் இப்படமானது, அதிரடி ஆக்சன் படமாக உருவாகியிருக்கிறதாம். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். அனிருத்தின் இசையமைப்பில் இப்படமானது வரும் 2025, செப்டம்பர் 5ம் தேதியில் வெளியாகிறது. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக இது இருந்துவருகிறது.
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி :
பிரதீப் ரங்கநாதனின் (Pradeep Ranganathan) நடிப்பில் இறுதியாக வெளியான டிராகன் படமானது சூப்பர் ஹிட் படமாக அமைந்திருந்தது. அதை அடுத்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மற்றும் நயன்தாராவின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம்தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கிருத்தி ஷெட்டி நடித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் சைன்ஸ் பிக்க்ஷ்ன் கதையில் உருவாகியுள்ள இப்படம் 2025, செப்டம்பர் 18ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது.
இட்லி கடை :
The wait is over! 🍿🔥 Experience #IdlyKadai on the big screen worldwide from October 1st!
A Film by @dhanushkraja
A @gvprakash Musical
Produced by @AakashBaskaran & #Dhanush @Kiran10koushik #PrasannaGK @jacki_art @PeterHeinOffl #BabaBaskar @kavya_sriram #PraveenD #Nagu… pic.twitter.com/kjfDcZGUZ1— Wunderbar Films (@wunderbarfilms) April 4, 2025
நடிகர் தனுஷின் (Dhanush) இயக்கத்தில் மற்றும் நடிப்பில் உருவாகியிருக்கும் தமிழ் படம்தான் இட்லி கடை. இந்த படத்தில் தனுசிற்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். கிக் பாக்சிங் கதைக்களத்துடன் மிக பிரம்மாண்டமாக இப்படம் உருவாகியிருக்கிறது. இதில் முக்கிய வேடத்தில் ராஜ்கிரண், அருண் விஜய், ஷாலினி பாண்டே மற்றும் சமுத்திரக்கனி இணைந்த நடித்துள்ளனர். இப்படத்தை டான் பிக்ச்சர்ஸ் உடன் இணைந்து தனுஷும் தயாரித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
கருப்பு :
இயக்குனரும், நடிகருமான ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கருப்பு. நடிகர் சூர்யா (Suriya) மற்றும் திரிஷா கிருஷ்ணன் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். சூர்யாவின் 45வது திரைப்படமாக இப்படம் உருவாகியிருக்கும் நிலையில், அதிரடி கிராமத்து கதைக்களத்துடன் உருவாகியிருக்கிறது.
இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், வரும் 2025ம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவின் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.