Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Rajinikanth : கூலியில் ரஜினிகாந்த் சாரை லோக்கல் வைப்பில் பார்க்கலாம் – அனிருத் தகவல்!

Anirudh Ravichander About Rajinikanth : தமிழ் சினிமாவையும் கடந்து பான் இந்தியா வரை பிரபல மிக்க இசையமைப்பாளராக இருந்து வருபவர் அனிருத். இவர் ரஜினிகாந்த்தின் கூலி படத்தில் இசையமைத்திருக்கும் நிலையில், அதில் ரஜினிகாந்த்துடன் பணியாற்றியது குறித்து அனிருத் பேசியுள்ளார். இதைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

Rajinikanth : கூலியில் ரஜினிகாந்த் சாரை லோக்கல் வைப்பில் பார்க்கலாம் – அனிருத் தகவல்!
அனிருத் மற்றும் ரஜினிகாந்த்Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 01 Jul 2025 20:42 PM

இந்திய அளவில் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander). இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது, இந்தி, தெலுங்கு போன்ற மொழிகளிலும் படங்களுக்கு இசையமைப்பாளராக இசையமைத்து வருகிறார். மேலும் மற்ற இசையமைப்பாளர்களின் இசையமைப்பில் பாடல்களும் பாடிவருகிறார். இந்நிலையில், இவர் தமிழில் ஜன நாயகன் (Jana Nayagan), கூலி (Coolie) , மதராஸி என அடுத்தடுத்த முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கும் இசையமைப்பாளராக இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இவரின் இசையமைப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் படம்தான் கூலி (Coolie) . நடிகர் ரஜினிகாந்த்தின் (Rajinikanth) முன்னணி நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj)  இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தைத் தென்னிந்தியப் பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் (Sun Pictures) தயாரித்துள்ளது.

இப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் இசையமைத்துள்ள நிலையில், சிக்கிட்டு வைப் (Chikitu Vibe) என்ற பாடலானது சமீபத்தில் வெளியானது.  அதில் அனிருத், டி. ராஜேந்திரன் மற்றும் சாண்டி மாஸ்டர் இணைந்து நடனமாடியிருந்தனர். இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அனிருத், ரஜினிகாந்த் சார் சிக்கிட்டு வைப் பாடலை கேட்டது பற்றியும், அவர் பாடலுக்கு நடனமாடக் கஷ்டமாக இருப்பதாகக் கூறியது பற்றியும் ஓபனாக பேசியுள்ளார்.

ரஜினிகாந்த் குறித்து அனிருத் பேசிய விஷயம் :

அந்த நேர்காணலில் ரஜினிகாந்த்தைப் பற்றிப் பேசிய அனிருத், “ரஜினிகாந்த் சார் எப்போது பாடல்களை ஷூட்டிங்கிற்கு முன்னாள் கேட்கமாட்டாரு. ஆனால் ஹுக்கும் பாடல் மட்டும் ஷூட்டிங்கிற்கு 2 நாட்களுக்கு முன் கேட்டார். மேலும் இந்த கூலி படத்தில் சிக்கிட்டு வைப் பாடல் ஷூட்டிங்கின் போது அவர் இப்பாடலை மிகவும் விரும்பினார். அந்த பாடல் ஷூட்டிங்கின்போது என்னிடம் பேசிய ரஜினிகாந்த் சார், இந்த பாடல் மிகவும் நன்றாக இருந்ததாகவும், கொஞ்சம் நடனமாடுவதற்கு மட்டும் கஷ்டமாக இருக்கிறது என ரஜினிகாந்த் சார் என்னிடம் பேசியிருந்தார். மேலும் இந்த சிக்கிட்டு பாடலை முதலில் லோகேஷ் சாருக்கு அனுப்பினேன், அவர் மிகப் பெரிய டி. ராஜேந்திரன் சார் ரசிகர்.

அவருக்கும் இப்படத்தில் டிராக் மற்றும் பாடல் அமைப்பும் பிடித்திருந்தது. மேலும் ஷூட்டிங் பண்ணப்போகிறார் என எனக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. மேலும் பல வருடங்களுக்குப் பின் ரஜினிகாந்த் சார் இப்படத்தில் பாடலை பாடி, லோக்கலாக நடனமாடியுள்ளார். மேலும் லோகேஷ் கனகராஜும் இப்பாடலின் விஷுவலில் மிரட்டிவிட்டார் என்றே கூறலாம் . அந்த அளவிற்கு இப்படத்தில் சிக்கிடு பாடலானது தரமாக உருவாகியிருப்பதாக அனிருத் பேசியுள்ளார்.

அனிருத் பேசிய வீடியோ :

கூலி திரைப்படம்

ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படமானது பான் இந்திய மொழிகளில் ரிலீசிற்கு காத்திருக்கிறது. இதில் அமீர்கான், நாகார்ஜுனா, ஸ்ருதி ஹாசன், உபேந்திர ராவ் எனப் பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.