Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Sarathkumar : 3BHK படத்தின் டப்பிங்கிலேயே அழுதுவிட்டேன் – சரத்குமார் ஓபன் டாக்!

Sarathkumar About His Experience Dubbing For The 3BHK Movie : தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள் என்ற படத்தின் மூலம் இயக்குநராக நுழைந்தவர் இயக்குநர் ஸ்ரீ கணேஷ். இவரின் இயக்கத்தில் 3BHK படமானது ரிலீசிற்கு காத்திருக்கிறது. இப்படத்தின் தொடர்பாக நேர்காணலில் பேசிய சரத்குமார், இப்படத்தின் டப்பிங் போது, அழுதது குறித்துப் பேசியுள்ளார்.

Sarathkumar : 3BHK படத்தின் டப்பிங்கிலேயே அழுதுவிட்டேன் – சரத்குமார் ஓபன் டாக்!
சரத்குமார்Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 30 Jun 2025 21:54 PM

நடிகர் சித்தார்த்தின் (Siddharth) 40வது திரைப்படமாக உருவாகியிருப்பது 3BHK திரைப்படம். இந்த திரைப்படத்தில் சித்தார்த் முன்னணி கதாநாயகனாக நடித்திருக்கும் நிலையில், அவருக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் (Sarathkumar) நடித்துள்ளார். சரத்குமாரின் நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான போர் தொழில் (Por Thozhil)  . இந்த படமானது சரத்குமாருக்குப் பல ஆண்டுகளுக்குப் பின், நல்ல வரவேற்புகளைக் கொடுத்த படமாக அமைந்திருந்தது. அதைத் தொடர்ந்து தி ஸ்மைல் மேன் என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் அவருக்கு இப்படம் அந்தளவிற்கு வரவேற்பைக் கொடுக்கவில்லை. அதை தொடர்ந்து முக்கிய வேடத்தில் நடித்துவந்த படம்தான் 3BHK. இந்த படத்தை இயக்குநர் ஸ்ரீ கணேஷ் (Shri Ganesh) இயக்கியுள்ளார். இவர் 8 தோட்டாக்கள் என்ற படத்தை இயக்கி சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 3BHK படமானது வரும் 2025, ஜூலை 4ம் தேதி முதல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய சரத்குமார், இப்படத்தின் டப்பிங் பணியின் போது நடந்தது பற்றிப் பேசியுள்ளார்.

3BHK பட டப்பிங்கில் நடந்தது குறித்த சரத்குமார் பேச்சு :

நேர்காணல் ஒன்றில் பேசிய சரத்குமார், “இந்த 3BHK படத்திற்குத் தமிழ் மற்றும் தெலுங்கு டப்பிங் செய்யும்போதே அழுதுவிட்டேன். அந்தளவிற்கு இந்த கதையின் தாக்கம் இருந்தது” அவர் பேசியுள்ளார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்களுக்கும் இப்படத்தின் மீது ஆர்வம் அதிகரித்து வருகிறது.

3BHK படக்குழு வெளியிட்ட வீடியோ :

3BHK படத்தின் கதைக்களம் என்ன?

இந்த 3BHK திரைப்படத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, மீத்தா ரகுநாத் என பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர் . மேலும் சூரிய வம்சம் படத்தைத் தொடர்ந்து பல வருடங்களுக்குப் பின் சரத்குமார் மற்றும் தேவயானி இணைந்து கணவன் மனைவியாக இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் கதைக்களமானது சாதாரண மிடில் கிளாஸ் குடும்பம், ஒரு வீடு கட்டுவதற்காக எவ்வாறு கஷ்டப்படுகின்றனர். மேலும் எவ்வாறு இன்னல்களை அனுபவிக்கின்றனர் என்பதைப் பற்றி இப்படத்தின் கதைக்களம் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் வாடகை வீட்டில் இருக்கும் குடும்பங்கள் படும் கஷ்டங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீ கணேஷ். இந்த படமானது வரும் 2025, ஜூலை 4ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.