AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

SJ Suryah : என்ன தவம் செய்தேன் இந்த அன்பு கிடைப்பதற்கு… எஸ்.ஜே.சூர்யா நெகிழ்ச்சி!

SJ Suryah Thanked The Fans And Friends : தமிழ் சினிமாவின் முக்கிய வில்லனாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களால் வரவேற்கப்படுபவர் எஸ்.ஜே. சூர்யா. இவரின் முன்னணி இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகவிருக்கும் படம் கில்லர். இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் தொடங்கியிருக்கும் நிலையில், அதற்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு, தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கும் வண்ணம் எஸ்.ஜே. சூர்யா எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார்

SJ Suryah : என்ன தவம் செய்தேன் இந்த அன்பு கிடைப்பதற்கு… எஸ்.ஜே.சூர்யா நெகிழ்ச்சி!
எஸ்ஜே. சூர்யாImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 30 Jun 2025 19:11 PM IST

நடிகர் அஜித் குமாரின் (Ajith kumar)  வாலி (Vaalee)  திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.ஜே. சூர்யா (SJ Suryah).  நடிகர் அஜித்தின் வாலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, விஜய் (Vijay ) முதல் மகேஷ் பாபு (Mahesh Babu)  வரை பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களை இயக்கியிருக்கிறார். இந்நிலையில், இவரின் இயக்கத்தில் சுமார் 10 வருடங்களுக்குப் பின் புதிய படம் உருவாகவுள்ளது. இந்த படத்தில் நடிகராக எஸ்.ஜே. சூர்யாவே நடிக்கவிருக்கிறார். இந்த படத்திற்கு எஸ்.ஜே. சூர்யா, கில்லர் (Killer) என்ற டைட்டிலை வைத்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் கடந்த 2025, ஜூன் 27ம் தேதியில் தொடங்கியது. இந்நிலையில், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இயக்குநராகக் களமிறங்கிய எஸ்.ஜே. சூர்யாவிற்கு, முன்னணி நடிகர்கள் முதல் பலரும் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் .

இந்நிலையில், தனக்கு வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவிக்கும் விதத்தில் எஸ்.ஜே. சூர்யா, எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எஸ்.ஜே சூர்யா, “என்ன தவம் செய்தேன் இந்த அன்பு கிடைப்பதற்கு” என்றும் எழுதியுள்ளார்.

நன்றி தெரிவிக்கும் விதத்தில் எஸ்.ஜே. சூர்யா வெளியிட்ட எக்ஸ் பதிவு :

இந்த பதிவில் நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே. சூர்யா, “எனது துறை நண்பர்களுக்கும், பிரஸ் மற்றும் மீடியா நண்பர்களுக்கும், மேலும் என் அன்பான ஆருயிரான ரசிகர்களுக்கும் என் அது நெஞ்சார்ந்த நன்றிகள். நான் மீண்டும் இயக்குநராகப்போவதை அறிவித்தபோது, நீங்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து எனக்கு ஆதரவளித்து மிகுந்த அன்பைப் பொழிந்துள்ளீர்கள்.  நான் என்ன தவம் செத்தேன் இந்த அன்பு கிடைப்பதற்கு. மேலும் இந்த கில்லர் படத்தின் அடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும்” என்று நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே. சூர்யா அந்த பதிவில் எழுதியுள்ளார்.

எஸ்.ஜே. சூர்யாவின் கில்லர் திரைப்படம்

சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின் எஸ்.ஜே. சூர்யா இயக்குநராக இயக்கம் புதிய படம்தான் கில்லர். இந்த படத்தை கோகுலம் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா இயக்குநர் மற்றும் முன்னணி கதாநாயகன் என பணியாற்றவுள்ளார்.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கிஸ் மற்றும் அயோத்தி போன்ற படங்களில் நடித்த நடிகை ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கவுள்ளார். மேலும் இப்படத்தில் ஷூட்டிங் வெளிநாடுகளில் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. எஸ்.ஜே. சூர்யா 10 ஆண்டுகளுக்குப் பின் இயக்குநராகும் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு அதீத எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us