AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தளபதி விஜயின் தி கோட் படத்தில் நடிக்க என்ன காரணம்? நடிகை மீனாட்சி சௌத்ரி விளக்கம்

Actress Meenakshi Chaudhary talks about The GOAT movie | தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக வலம் வருபவர் நடிகை மீனாட்சி சௌத்ரி. இவர் தளபதி விஜயின் தி கோட் படத்தில் நடிக்க என்ன காரணம் என்பது குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தளபதி விஜயின் தி கோட் படத்தில் நடிக்க என்ன காரணம்? நடிகை மீனாட்சி சௌத்ரி விளக்கம்
தளபதி விஜய் - மீனாட்சி சௌத்ரிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 27 Jul 2026 11:32 AM IST

தென்னிந்திய மொழிகளில் தற்போது முன்னணி நாயகியாக வலம் வருகிறார் நடிகை மீனாட்சி சௌத்ரி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு இந்தி மொழியில் வெளியான அப்ஸ்டார்ட்ஸ் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் அடுத்தடுத்தப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதன் காரணமாக தற்போது தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார் நடிகை மீனாட்சி சௌத்ரி. தொடர்ந்து பல முன்னணி நாயகன்களுடன் இணைந்து நடிகை மீனாட்சி சௌத்ரி நடித்து உள்ளார். அதன்படி தமிழ் மொழியில் நடிகர்கள் ஆர்.ஜே.பாலாஜி, விஜய் ஆண்டனி மற்றும் தளபதி விஜய் உடன் கூட்டணி வைத்த நடிகை மீனாட்சி தெலுங்கு மொழியில் மகேஷ் பாபு, துல்கர் சல்மான் மற்றும் வெங்கடேஷ் என பலருடன் நடித்து உள்ளார்.

நடிகை மீனாட்சி சௌத்ரி தற்போது தெலுங்கு மொழியில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி இவரது நடிப்பில் இறுதியாக வெளியான படம் அனகனகா ஒக ராஜு. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அடுத்ததாகவும் தெலுங்கு மொழியில் நடிகை மீனாட்சி சௌத்ரி நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தளபதி விஜயின் தி கோட் படத்தில் நடிக்க என்ன காரணம்?

நான் தி கோட் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு முக்கியக் காரணம், நான் விஜய் சார் மீது கொண்ட ஈடுபாடுதான். அவருடைய படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வரும்போது, ​​இயல்பாகவே அதற்குச் சம்மதம் தெரிவித்துவிடுவோம். அவருடன் இணைந்து திரையைப் பகிர்ந்துகொள்வது, நடிப்பது, நடனமாடுவது மற்றும் ஒரே மேடையில் அவருடன் இருப்பது போன்ற நினைவுகளை நான் பெற விரும்பினேன். அவருடன் பணியாற்றியது உண்மையிலேயே ஒரு அற்புதமான அனுபவம்; படப்பிடிப்பு முழுவதும் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்.

Also Read… எனது படங்களில் வலிமை தான் மிகக் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது – இயக்குநர் எச். வினோத்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… மற்றவர்கள் மீது அன்பும் அக்கறையும் கொண்ட ஒரு நல்ல மனிதர் விஜய் – புகந்து பேசிய ரீல் அம்மா

Follow Us