நீங்கள் என் மீது வைத்த அளவற்ற நம்பிக்கைக்கு நன்றி விஜய் சார் – அனிருத் ரவிச்சந்தர்
Anirudh Ravichander heartfelt post about Thalapathy Vijay | நடிகர் தளபதி விஜய் குறித்தும் அவரது படங்களில் பணியாற்றியது குறித்தும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் தற்போது வெளியிட்ட எக்ஸ் தள பதிவு ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். இவரது இசையில் வெளியாகும் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து பான் இந்திய மொழிகளில் பிசியான இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். இவரது இசையில் இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் இதுரை இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதில் ஒன்று பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் தளபதி விஜயின் ஜன நாயகன் ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களும் தற்போது வரிசையாக வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ஜன நாயகன் படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இந்தப் படம் நடிகர் தளபதி விஜயின் நடிப்பில் வெளியான கடைசிப் படம் என்பதால் இந்தப் படத்தில் பணியாற்றியவர்கள் தொடர்ந்து படம் குறித்தும் தளபதி விஜய் குறித்தும் தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் தளபதி விஜய் குறித்தும் அவரது படங்களில் பணியாற்றியது குறித்தும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.




நீங்கள் என் மீது வைத்த அளவற்ற நம்பிக்கைக்கு நன்றி விஜய் சார்:
அந்தப் பதிவில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் கூறியதாவது, ஜனநாயகன், லியோ, பீஸ்ட், மாஸ்டர் மற்றும் கத்தி ஆகிய படங்கள் வாயிலாக உங்களுடன் பயணித்தது மிகவும் அற்புதமான மற்றும் உணர்வுப்பூர்வமான ஒரு அனுபவம். நீங்கள் என் மீது வைத்த அளவற்ற நம்பிக்கைக்கும், நான் என்றென்றும் போற்றிப் பாதுகாக்கும் நினைவுகளுக்கும் நன்றி விஜய் சார். இசை அன்புடன் என்றும் நிலைத்திருக்கும் என்று அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… தனுஷின் படத்தைப் பார்த்து பாராட்டிய தளபதி விஜய் – என்ன படம் தெரியுமா?
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
It has been a thoroughly amazing and emotional journey with you through JanaNayagan, Leo, Beast, Master and Kaththi 📈
Thank you @actorvijay sir for the unlimited trust and memories that I will cherish forever 🤗
The music lives on ❤️ pic.twitter.com/kt9On6Ms1L— Anirudh Ravichander (@anirudhofficial) July 27, 2026
Also Read… DC Movie: லோகேஷ் கனகராஜின் ‘டிசி’ பட முழு ஆல்பம் வெளியானது!