AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆப்பிரிக்காவில் நடக்கிறதா அனிருத்தின் திருமணம்? எப்போது தெரியுமா? – வைரலாகும் தகவல்!

Anirudh Ravichander Wedding: கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் இசையமைப்பாளராக இருந்துவருபவர் அனிருத் ரவிச்சந்தர். இவர் காவியா மாறனை டேட்டிங் செய்துருவதாக கூறப்படும் நிலையில், இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் திருமண தேதி வைரலாகிவருகிறது. அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

ஆப்பிரிக்காவில் நடக்கிறதா அனிருத்தின் திருமணம்? எப்போது தெரியுமா? – வைரலாகும் தகவல்!
அனிருத் ரவிச்சந்தர்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 04 Jul 2026 16:32 PM IST

தென்னிந்திய சினிமாவையே ஆட்டிப்படைக்கும் இசையமைப்பாளராக இருந்துவருபவர் ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander). இவர் தமிழ் சினிமாவின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான நிலையில், தற்போது பான் இந்திய மொழிகளிலும் படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றிவருகிறார். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) முதல் முதல்வர் தளபதி விஜய் (CM Vijay) உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களின் படங்களுக்கும் இசையமைப்பாளராக பணியாற்றியிருக்கிறார். இவ்வாறு தொடர்ந்து பான் இந்திய பிரபலத்தை தக்கவைத்துவருகிறார். சமீபகாலமாக அனிருத்தின் திருமணம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் பரவலாக பரவிவருகிறது.

மேலும் அவரின் நெருங்கிய உறவினரான ஒய்.ஜி. மகேந்திரனும் இவர் திருமணம் குறித்த தகவலை கூறியிருந்தார். அனிருத் மற்றும் சன் பிக்ச்சர்ஸ் மற்றும் சன் ரைஸஸ் ஆப் ஹைதராபாத் அணியின் CEO-வான காவியா மாறன் (Kavya Maaran) இருவரும் டேட்டிங் செய்துவருவதாக கூறப்பட்ட நிலையில், விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாம்.

இதையும் படிங்க: எனக்கு கிடைக்கும் அனைத்து பாராட்டுகளுக்கும் ரவிமோகன் சார்தான் காரணம் – பிரதீப் ரங்கநாதன்

அனிருத் மற்றும் காவியா டேட்டிங்:

அனிருத், காவியா மாறன் இருவருமே கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக டேட்டிங் செய்துவருகிறார்கள். இவர்கள் இருவரும் வெளிநாடுகளில் ஒன்றாக உலா வருவது மற்றும் செல்வது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவரும். அந்த வகையில் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்கிறார்களாம்.

அனிருத் – காவியா மாறனின் திருமணம் எங்கு எப்போது:

அவர்கள் இருவருமே, வரும் 2026ம் ஆண்டில் நவம்பர் 12ம் தேதியில் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள செஷல்ஸில் என்ற இடத்தில் திருமணம் செய்துகொள்கிறார்களாம். இவர்களின் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொள்கிறார்களாம். மேலும் இவர்கள் இருவரின் வரவேற்பு சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இந்த திருமண தகவல்கள் குறித்து அனிருத் மற்றும் காவியா மாறன் தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சாய் அபயங்கர் பிஆர் மூலம் பிரபலமாவதாக கூறுகிறார்கள் – இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி

அனிருத்தின் திருமண தேதி குறித்து வைரலாகும் எக்ஸ் பதிவு:

அனிருத் தற்போது படங்களுக்கு இசையமைக்கும் பணிகளில் மிகவும் பிசியாக இருக்கிறார். தமிழ் முதல் இந்தி போன்ற மொழிகளில் இவரின் இசையமைப்பு பணிகள் நடைபெற்றுவருகிறது. தற்போது சாய் அபயங்கர் இசையமைப்பாளராக முன்னேறி வரும் நிலையில், அனிருத்தும் அவரின் கடினமான உழைப்பையும் வெளிப்படுத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us