இணையத்தில் வைரலாகும் விஜய் சேதுபதி – சாய் பல்லவி பட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்
Vijay Sethupathi - Sai Pallavi movie shooting spot photos viral on social meida | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதிகாய மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து நாயகன், வில்லன் சிறப்பு கதாப்பாத்திரம் என அனைத்து விதமான கதாப்பாத்திரங்களும் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. தமிழ் சினிமாவில் இவரது நடிப்பில் உருவாகி படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் நிலையில் அடுத்ததாக இவர் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகை சாய் பல்லவி உடன் இணைந்து படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது தொடங்கி நடைப்பெற்று வருகின்றது. படம் தொடர்பான தகவல்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து பிசியான நடிகையாக வலம் வந்த நடிகை சாய் பல்லவி தற்போது இந்தி மொழியிலும் தொடந்து படங்களில் நடித்து வருகிறார். இந்தி மொழியில் அடுத்ததாக நடிகை சாய் பல்லவி நடிப்பில் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் இவர் நடித்து வருகிறார்.




வைரலாகும் மணிரத்னமின் புதுப் பட ஷூட்டிங் போட்டோஸ்:
மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது கொல்கத்தாவில் தொடங்கி நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி க்ளீன் சேவ் செய்து உடல் எடையை குறைத்து மிகவும் வித்யாசமாக உள்ளார் என்பது அந்தப் புகைப்படங்களைப் பார்க்கும் போது தெரிகிறது. மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக இந்த ஷூட்டிங் நடைப்பெற்று வருவதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… விஸ்வநாத் & சன்ஸ் படத்தில் ஜோதிகா மேம் சில ஆலோசனைகளை வழங்கினார் – இயக்குநர் வெங்கி அட்லூரி
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
🎬 #VijaySethupathi and #SaiPallavi were spotted shooting a dance sequence for #ManiRatnam‘s upcoming film on the rooftop of a house near Jagannath Ghat in Howrah.
The team had also filmed key scenes featuring the duo on the iconic Howrah Bridge the previous night, adding to the… pic.twitter.com/AL6ScCu0oa
— Kollywood Wire (@KollywoodWire) July 26, 2026
Also Read… செப்டம்பரில் தொடங்குகிறது AK 64 2படத்தின் ஷூட்டிங்? வைரலாகும் தகவல்