Vimal: என்ன தளபதி மாதிரி அழவைக்க முடியாது.. செக் மோசடி வழக்கு குறித்து விமல் அளித்த பதில்!
Vimals Sarcastic Reply on Cheque Fraud Case: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விமல். இவர் சமீபத்தில் காசோலை மோசடி பிரச்சனையின் காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவருகிறது. அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அது குறித்து நக்கலாக தனது பதிலை அவர் தெரிவித்துள்ளார்.
கோலிவுட் சினிமாவில் சிறப்பான நடிப்பின் மூலம் மக்களை கவர்ந்துவருபவர் விமல் (Vimal). இவரை அவரின் ரசிகர்கள் “கேலக்ஸி ஸ்டார்” என்று அன்போடு அழைப்பதுண்டு. இவரின் நடிப்பில், தொடர்ந்து தமிழ் சினிமாவில் படங்கள் மற்றும் வெப் தொடர்களும் வெளியாகிறது. இவரின் நடிப்பில் சினிமாவில் இறுதியாக வெளியாகியிருந்தது வடம் திரைப்படம் (Vadam Movie). இப்படத்தில் நடிகர் நட்டி நடராஜுடன் இவர் இணைந்தது நடித்திருந்தார். இப்படத்திற்கு பின், தற்போது புதிய திரைப்படங்களிலும் நாயகனாக பணியாற்றிவருகிறார். இவர் மன்னர் வகையறா படத்திற்காக பைனாசியரிடம் ரூ 4.5 கோடி கடன் பெற்றதாகவும், அதை திருப்பி கொடுக்கும் வகையில் கொடுத்த காசோலை பவுன்ஸ் ஆனா காரணத்தினால், இவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு (cheque fraud case) தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரிக்கப்பட்ட நிலையில், ஓராண்டு சிறைத்தண்டனை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் விமலின் தரப்பு மேல்முறையீடு செய்யவுள்ளதாக கூறப்படும் நிலையில், தண்டனை நிறுத்திவைக்கப்படுள்ளதாம்.
இன்று (24/07/2026) சென்னை கமலா தியேட்டருக்கு நடிகர் விமல் ஜன நாயகன் படத்தை பார்த்து, ரசிகர்களுடன் நடனமாடி கொண்டாடியுள்ளார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜன நாயகன் படம் மற்றும் தனது காசோலை மோசடி வழக்கு குறித்து பேசியுள்ளார்.




இதையும் படிங்க: ரன்பீர் கபூர் – சாய் பல்லவியின் ராமாயணா 1 பட ட்ரெய்லர் ரிலீஸ் ஒத்திவைப்பு.. காரணம் இதுதான்!
காசோலை மோசடி வழக்கு குறித்து நக்கலாக பதிலளித்த விமல்:
ஜன நாயகன் படத்தைப் பார்த்தபிறகு செய்தியாளர்களை சந்தித்த விமல், அவர்களிடம், “ரசிகர்களுடன் சேர்ந்து படம் அதைப் பார்த்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இது முன்னரே வெளியாகி இருந்தாலும், இது வெறும் ‘தளபதி’ படமாகத்தான் இருந்திருக்கும், இப்போதும் இது ஒரு ‘தளபதி’ படம்தான், ஆனால் இன்று நமது தமிழக முதல்வரின் படத்தைப் பார்க்கும் கூடுதல் மகிழ்ச்சி இருக்கிறது, அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் அதைப் பார்த்தார்கள்; ரசிகர்கள் அதை மிகவும் ரசித்தார்கள். படம் ஜனவரியிலேயே வெளியாகிவிட்டாலும், அவர் அந்த விஷயங்கள் அனைத்தையும் அப்போதே யோசித்திருக்கிறார், திரைப்படத்தில் நாம் பார்த்தது அப்படியே நிஜமாகிவிட்டது.
இதையும் படிங்க: ஜன நாயகன் ரிலீஸோட ஸ்ட்ரெஸ் எல்லாம் முடிஞ்சிது – எச் வினோத் பேச்சு!
இன்று, அது தமிழ்நாடு முழுவதற்கும் ஒரு யதார்த்தமாகிவிட்டது என் பேசினார். பின் செக் மோசடி வழக்கு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டநிலையில், அப்போது விமல், “அப்படியா எப்போது, எனக்கே தெரியவில்லை, நன்றி வணக்கம். அந்த வழக்கு அதுபோல நடக்கும்” என சொன்னார். மீண்டும் அது குறித்து கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், “என்னை தளபதி மாதிரி அழவைக்க முடியாது, நன்றி வணக்கம்” என நக்கலாக பதிலளித்திருந்தார்.
ஜன நாயகன் மற்றும் தனது செக் மோசடி வழக்கு குறித்து நடிகர் விமல் பேசியது தொடர்பாக வைரலாகும் பதிவு:
தற்போது 🔔 : சென்னை கமலா திரையரங்கில் #JanaNayagan திரைப்படம் பார்த்த பின்பு நடிகர் #Vimal பேட்டி !
“ரசிகர்களுடன் சேர்ந்து படம் அதைப் பார்த்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இது முன்னரே வெளியாகி இருந்தாலும், இது வெறும் ‘தளபதி’ படமாகத்தான் இருந்திருக்கும், இப்போதும்… pic.twitter.com/kc09mdnBoY
— Prakash Vijay (@PrakazVijay_Of) July 24, 2026
நடிகர் விமல் ஜன நாயகன் படத்தை இன்று கண்டுகளித்துள்ள நிலையில், அங்கு தியேட்டரில் ரசிகர்களுடன் திரையின் முன் நின்று நடனமாடியுள்ளார். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.