AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரன்பீர் கபூர் – சாய் பல்லவியின் ராமாயணா 1 பட ட்ரெய்லர் ரிலீஸ் ஒத்திவைப்பு.. காரணம் இதுதான்!

Ramayana Part 1 Trailer Delay: பான் இந்திய திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ள படம்தான் ராமாயணா 1. இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படமானது, 2026ம் ஆண்டு தீபாவளி பண்டிகையில் வெளியாகவுள்ளது. அந்த வகையில், இன்று (24/07/2026) இதன் ட்ரெயிலர் வெளியாகுவதாக அறிவிக்கப்பட்ட நிலையி, அதை படக்குழு ஒத்திவைத்துள்ளது.

ரன்பீர் கபூர் – சாய் பல்லவியின் ராமாயணா 1 பட ட்ரெய்லர் ரிலீஸ் ஒத்திவைப்பு.. காரணம் இதுதான்!
ராமாயணா 1 Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 24 Jul 2026 16:28 PM IST

பாலிவுட் சினிமாவில் உச்ச நாயகனாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ரன்பீர் கபூர் (Ranbir Kapoor). இவரின் நடிப்பில் இறுதியாக கடந்த 2023ம் ஆண்டில் அனிமல் (Animal) என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது. இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் வெளியாகியிருந்த இப்படமானது மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின், ரன்பீர் கபூர் கிட்டத்தட்ட 2 ஆண்டுக்கும் மேலாக பணியாற்றிவரும் படம்தான் ராமாயணா பார்ட் 1 (Ramayana Part 1). இந்த படமானது பான் இந்திய மொழிகளில் உருவாகியுள்ள நிலையில், அதை இயக்குநர் நிதேஷ் திவாரி (Nitesh Tiwari) இயக்கியுள்ளார். இவர் இப்படத்தை இயக்க, பாலிவுட் தயாரிப்பாளாரான நமித் மல்ஹோத்ரா (Namit Malhotra) இதை தயரிட்டுள்ளார். இதில் ரன்பீர் கபூர் ராமனாக நடிக்க, நடிகை சாய் பல்லவி (Sai Pallavi) சீதையாக நடித்துள்ளார்.

மேலும் ராவணனாக கன்னட நடிகர் யாஷ் (Yash) நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சி ஏற்கனவே மும்பையில் நடத்தப்பட்டிருந்தது. அதையடுத்து, இன்று 2026ம் ஆண்டு ஜூலை 24ம் தேதியில் இணையத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதை படக்குழு ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஜன நாயகன் படத்தில் என் காட்சிகளை நீக்கிவிட்டார்கள்… அழுதுகொண்டே வீடியோ வெளியிட்ட நடிகை ஆனந்தி

ராமாயணா பார்ட் 1 பட ட்ரெயிலர் ரிலீஸை ஒத்திவைத்து குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

ராமாயணா 1 ட்ரெய்லர் ஒத்திவைக்க காரணம்:

இன்று நமது ராமாயணா படத்திற்க்கு ஒரு மிகச் சிறப்பான தருணம். சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் உடனான நமது கூட்டாண்மையால், ராமாயணத்தை உலகிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற எனது கனவு இப்போது நனவாகியுள்ளது. மேற்கூறியவற்றின் அடிப்படையில், எங்களின் டிரெய்லரை இப்போது உலகளவில் பிற்காலத்தில் வெளியிடுவோம்.

இதையும் படிங்க: அந்த விசயத்திற்கு சூர்யா சார் சம்மதித்தது ஆச்சரியாமாக இருந்தது – இயக்குநர் வெங்கி அட்லூரி

100 ஆண்டுகளுக்கும் மேலான இந்திய திரையுலக வரலாற்றில், எந்தவொரு பெரிய உலகளாவிய ஹாலிவுட் திரைப்படத்தைப் போலவும் ராமாயணம் முழு உலகிற்கும் காட்டப்படும் இந்தத் தருணம், பெரும் பெருமைக்குரிய தருணமாக அமையும்.
இது மிகவும் சிறப்பானது, ஏனெனில் இது உலக மக்கள் நமது கலாச்சாரத்தின் மற்றும் கதைகளின் செழுமையை ஒரு புதுப்பெருமையுடனும் உற்சாகத்துடனும் கண்டறிய ஒரு கதவைத் திறக்கிறது என படக்குழு அதில் தெரிவித்துள்ளது.

ராமாயணா 1 படத்தின் பட்ஜெட்:

இப்படத்தில் பான் இந்திய பிரபலங்கள் பலரும் இணைந்து நடித்துள்ளனர். ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ், காஜல் அகர்வால், ராகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் பாகம் 1 படத்திற்கு மட்டுமே கிட்டத்தட்ட ரூ 1000ம் கோடிகளுக்கு மேல் பொருட்செலவு ஆகியுள்ளதாம். இந்த இரு பாகங்களையும் எடுக்க குறைந்தபட்சம் சுமார் ரூ 3000 கோடிகள் நெருங்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us