AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Ramayana: ‘இந்த தருணத்தை அடைய எனக்கு 7 ஆண்டுகள் ஆனது’ – ராமாயணா படம் குறித்து இயக்குநர் நிதேஷ் திவாரி பேச்சு!

Nitesh Tiwari About Ramayana: இந்திய சினிமாவில் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் நிதேஷ் திவாரி. இவரின் இயக்கத்தில் பான் இந்திய பிரம்மாண்ட பட்ஜெட் திரைப்படமாக தயாராகியுள்ள படம்தான் ராமாயணா. இன்று இப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டிருந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் ராமாயணா படம் குறித்து நிதேஷ் திவாரி பேசியுள்ளார்.

Ramayana: ‘இந்த தருணத்தை அடைய எனக்கு 7 ஆண்டுகள் ஆனது’ – ராமாயணா படம் குறித்து இயக்குநர் நிதேஷ் திவாரி பேச்சு!
ரன்பீர் கபூர் மற்றும் நிதேஷ் திவாரிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 02 Apr 2026 17:00 PM IST

பாலிவுட் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் நிதேஷ் திவாரி (Nitesh Tiwari). இவர் தொடர்ந்து இந்தி சினிமாவில் பெரிய பெரிய படங்களை இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார். அந்த விதத்தில் இவரின் இயக்கத்தில் இந்தியாவிலே மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகியுள்ள திரைப்படம்தான் “ராமாயணா” (Ramayana). இந்த படமானது இரு பாகங்களாக தயாராகியுள்ள நிலையில், முதல் பாகத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டிலே முடிவடைந்தது. இந்த ராமாயணா முதல் பாகமானது வரும் 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு படக்குழு வெளியிட காத்திருக்கிறது. அந்த விதத்தில் இந்த ராமாயணா படத்தில் ராமராக ரன்பீர் கபூர் (Ranbir Kapoor), சீதையாக சாய் பல்லவியும் (sai Pallavi) மற்றும் இராவணனாக நடிகர் யாஷும் (Yash) நடித்துள்ளனர். இந்த முதல் பாகத்தில் நடிகர் யாஷின் பகுதி குறைவாகதான் இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த விதத்தில் இன்று 2026 ஏப்ரல் 2ம் தேதியில் ஹனுமான் ஜெயந்தியை முன்னிட்டு, ராமாயணா படத்திலிருந்து ராமரின் கிளிம்ப்ஸ் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த விதத்தில் இதன் ரிலீஸை ஒன்றிய நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் நிதேஷ் திவாரி, ராமாயணா படம் குறித்து பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: ரஜினி – விஜய் ஸ்டைல் நயன்தாராவிடமும் இருக்கு – கவின் பேச்சு!

ராமாயணா படம் குறித்து இயக்குநர் நிதேஷ் திவாரி பேச்சு:

ராமாயணா கிளிம்ப்ஸ் திரையிடலை முன்னிட்டு நிகழ்ச்சி ஒன்றில் நிதேஷ் திவாரி கலந்துகொண்டிருந்தனர். அந்த பேசிய அவர், “தனிப்பட்ட முறையில் இந்தத் தருணத்தை அடைய எனக்கு 7 ஆண்டுகளுக்கு மேல் ஆனது. ராமாயணத்தின் மகத்துவம் அதன் உணர்வுப்பூர்வமான செழுமையில் அடங்கியுள்ளது.

இதையும் படிங்க: மிகவும் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி உள்ளது ராமாயணா – வைரலாகும் டீசர்

அதன் சாராம்சத்தில், அது நன்மை தீமைகளைப் பற்றியது மட்டுமல்ல, தேர்வு, விளைவுகள் மற்றும் சரியானதைச் செய்வதன் பாரம் ஆகியவற்றைப் பற்றியதுமாகும். ராமரின் பயணம் ஆழ்ந்த மனிதத்தன்மை வாய்ந்தது, அதற்கே நாங்கள் உண்மையாக கொண்டுவர முயன்றிருக்கிறோம்” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

ராமாயணா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ பதிவு:

இந்த ராமாயணா திரைப்படமானது இந்து மதத்தின், பிரபலமான கடவுளான ராமரின் வாழ்க்கை கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது. அந்த விதத்தில் இந்தியாவில் கிட்டத்தட்ட ரூ 1000 கோடிகளுக்கு மேல் தயாராகிவரும் முதல் படமாகவும் இப்படம் அமைந்துள்ளது. இப்படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு மட்டுமே அதிகம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த விதத்தில் சமீபத்தில் வெளியான டீசர் தற்போது இணையத்தில் தீயாக பரவிவருகிறது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us