AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பல ட்விஸ்டுகள் நிறைந்த காமெடி படம்… ஓடிடியில் வெளியாகி உள்ள பென்னு கேஸ் படம் எப்படி இருக்கு?

Pennu Case Movie Streaming On Amazon Prime Video: மலையாள சினிமாவில் பல பிரபல நடிகர்கள் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றப் படம் பென்னு கேஸ். இந்தப் படம் ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

பல ட்விஸ்டுகள் நிறைந்த காமெடி படம்… ஓடிடியில் வெளியாகி உள்ள பென்னு கேஸ் படம் எப்படி இருக்கு?
பென்னு கேஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Apr 2026 18:54 PM IST

இந்தியாவில் பல இடங்களில் இந்த செய்தியை பார்த்து இருப்போம். செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் பார்த்து கடந்து சென்ற செய்தியை மையமாக வைத்து தொடர்ந்து பலப் படங்கள் உருவாகி வருகின்றது. அந்த வரிசையில் திருமண மோசடியை மையமாக வைத்து மலையாள சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் தான் பென்னு கேஸ். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல தற்போது ஓடிடியிலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் 10-ம் தேதி 2026-ம் ஆண்டு மலையாள சினிமாவில் வெளியானது பென்னு கேஸ் என்ற படம். இந்தப் படத்தை இயக்குநர் ஃபெபின் சித்தார்த் இயக்கி இருந்த நிலையில் திரைக்கதையை ஃபெபின் சித்தார்த் மற்றும்  ரெஸ்மி ராதாகிருஷ்ணன் இருவரும் இணைந்து எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்தில் நடிகை நிக்கிலா விமல் கதையின் நாயகியாக நடித்து இருந்த நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் ஹக்கீம் ஷாஜகான், அஜு வர்கீஸ், ரமேஷ் பிஷாரடி, சிவாஜித், பி.பி.குன்கிகிருஷ்ணன், இர்ஷாத் அலி, கிரண் பீதாம்பரன், பிரவீன் ராஜா, அனார்கலி நாசர், ஸ்ரீரேகா, ரஞ்சி கன்கோல், லாலி பி எம், அப்துல் கரீம் வலியகத், பாலா என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

நிக்கிலா விமலின் பென்னு கேஸ் படம் எப்படி இருக்கு?

பென்னு கேஸ் படத்தில் கேரளாவில் ஒரு 7 – 8 ஆண்கள் இணைந்து சென்று அஜு வர்கீஸிற்கு நடக்கும் திருமணத்தை நிறுத்துகின்றனர். இதில் அஜு வர்கீஸிற்கும் அவர்களுக்கும் எதோ பிரச்சனை என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போது அந்த கல்யாண பெண் நிகிலா விமல் மீது அவர்கள் அனைவரும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள். அதன் பிறகுதான் தெரிகிறது அவர் அந்த ஆண்கள் அனைவரையும் திருமணம் செய்துகொண்டு ஏமாற்றி அவர்களிடம் இருந்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றது.

Also Read… தனுஷ்  – தமிழரசன் பச்சைமுத்து படத்தின் ஷூட்டிங் எப்போது தெரியுமா? வைரலாகும் தகவல்

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நிகிலா விமலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் விசாரணையில் பல கதைகளை காவல்துறையினரிடம் கூறுகிறார். அதனைத் தொடர்ந்து போலிசார் விசாரிக்கும் போதே அடுத்தடுத்த நபர்கள் ஏமாற்றப்பட்டதும் தெரிகிறது. இப்படி இருக்கும் சூழலில் நிகிலா விமல் உண்மையிலேயே என்ன செய்தார் என்பது படத்தின் க்ளைமேக்ஸில் தெரியவரும். இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… எதிர் நீச்சல் – காக்கிச்சட்டை படங்கள் தனுஷ் சாருக்காக எழுதினேன்… இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் பேச்சு

Follow Us