விஜய் சேதுபதி – சாய் பல்லவி படத்தின் ஷூட்டிங் தொடங்கியது… வைரலாகும் தகவல்
Vijay Sethupathi and Sai Pallavi movie has now begun filming in Kolkata | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வரும் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் முன்னணி இயக்குராக வலம் வருபவர் இயக்குநர் மணிரத்னம். இவர் இயக்குநராக தனது சினிமா பயணத்தை கன்னட சினிமாவில்தான் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து தமிழ், மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் அடுத்தடுத்தப் படங்களை இயக்கினார். இவரது இயக்கத்தில் வெளியான அடுத்தடுத்தப் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான தக் லைவ் படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை. இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகும் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது.
முன்னதாக இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் படம் என்று தொடர்ந்து பல தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வந்தது. மேலும் அவர் ரொமாண்டிக் ட்ராமா பாணியில் படம் இயக்குவார் என்றும் தெரிவிக்கப்பட்ட நிலையில் பல நடிகர்களின் பெயர்களும் அடிபட்டு வந்தது.




விஜய் சேதுபதி – சாய் பல்லவி படத்தின் ஷூட்டிங் தொடங்கியது:
அதனைத் தொடர்ந்து நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி இருவரும் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்த நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இப்படி இருக்கும் சூழலில் அந்தப் படத்தின் ஷூட்டிங் தற்போது கல்கத்தாவில் தொடங்கியதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… Bobby Deol: என் கூட நடிக்கிறவங்க எல்லாம் அரசியலுக்கு போயிடுறாங்க- கலகலப்பாக பேசிய பாபி தியோல்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#ManiRatnam x #VijaySethupathi x #SaiPallavi shoot begins tomorrow in Kolkata with a 10-day schedule. The team will then move to Puducherry for the next leg of shooting. A portion of the film is set overseas, but Mani Ratnam sir is planning to recreate it realistically on a… pic.twitter.com/GzEdor109Q
— Movies Singapore (@MoviesSingapore) July 22, 2026