Hiphop Adhi: தோத்தாலும் மீசையமுறுக்கிக்கிட்டே தோப்பேன் டா.. மிசையமுறுக்கு 2 பட ரிலீஸ் அறிவிப்பு கிளிம்ப்ஸ் வெளியீடு!
Meesaya Murukku 2 Release Date: தமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளராக, இயக்குநராக மற்றும் நடிகராக மிகவும் பிரபலமானவர் ஹிப்ஹாப் ஆதி. இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 2 ஆண்டுக்கு பின் உருவாகியுள்ள திரைப்படம் மீசையமுறுக்கு 2. இப்படமானது மிகவும் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள நிலையில், இதன் ரிலீஸ் அறிவிப்பு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.
கோலிவுட் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக இருந்துவருபவர் ஹிப்ஹாப் ஆதி (Hiphop Adhi). இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம் கடைசி உலகப் போர் (Kadaisi Ulaga Por). கடந்த 2024ம் ஆண்டில் வெளியாகியிருந்த இப்படமானது எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்த படமானது தோல்வியில் முடிந்த நிலையில், பெரிதாக மற்ற இயக்குநர்களுடன் படங்களில் ஒப்பந்தமாகவில்லை. இந்நிலையில், ஹிப்ஹாப் ஆதி, தனது இயக்கம், நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாக்கியுள்ள புது படம்தான் மீசைய முறுக்கு 2 (Meesaya Murukku 2). இது கடந்த 2017ம் ஆண்டில் வெளியான மீசைய முறுக்கு 1 படத்தின் தொடர்ச்சியான கதைக்களம் போல இல்லாமல், புது விதமான கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை குஷ்பு சுந்தர் தயாரிக்க, ஹிப்ஹாப் அதையே இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இப்படத்திலிருந்து இதுஅவரி மொத்தம் 3 பாடல்கள் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படம் எப்போது ரிலீசாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ரிலீஸ் அறிவிப்பு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.




இதையும் படிங்க: பகவந்த் கேசரி ரீமேக்.. அந்த காட்சிகள் இன்னும் தொந்தரவு செய்ததாக முதல்வர் விஜய் சொன்னாரு – இயக்குநர் அனில் ரவிபுடி!
ஹிப்ஹாப் ஆதியின் மீசையமுறுக்கு 2 பட ரிலீஸ் எப்போது:
ஹிப்ஹாப் ஆதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருடன் கெட்டிகா சர்மா, சைத்ரா ஆச்சார் மற்றும் ரம்யா ரங்கநாதன் உள்ளிட்ட மொத்தம் 3 நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர். இதில் ஹிப்ஹாப் ஆதி மொத்தமாக 3 வேடங்களில் நடித்துள்ளாராம்.
இதையும் படிங்க: என் கூட நடிக்கிறவங்க எல்லாம் அரசியலுக்கு போடுறாங்க – கலகலப்பாக பேசிய பாபி தியோல்!
அதிரடி ஆக்ஷன், இசை மற்றும் காதல் போன்ற கதைக்களத்தில் இப்படமானது உருவாக்கப்பட்டுள்ள நிலையில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பாடல் வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மீசையமுறுக்கு 2 பட ரிலீஸ் தேதி குறித்து நடிகர் ஹிப்ஹாப் ஆதி வெளியிட்ட எக்ஸ் பதிவு;
September 25 🤘🏻 #Meesayamurukku2 is coming to theatres worldwide 🔥#meesyamurukku2 #september25 #concertintheatres pic.twitter.com/AGYjuQCknJ
— Hiphop Tamizha (@hiphoptamizha) July 23, 2026
மீசையமுறுக்கு 2 படத்துடன் வெளியாகும் படங்கள்:
2026ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விடுமுறையை ஒட்டி, தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து படங்கள் வெளியாகவுள்ளது. தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ரணபாலி படம் செப்டம்பர் 11ம் தேதியிலும், தமிழில் அருள்நிதியின் நடிப்பில் உருவான டிமாண்டி காலனி 3 படம் செப்டம்பர் 10ம் தேதியில் வெளியாகிறது. மேலும் சூரி அதிரடி ஆக்ஷன் நாயகனாக நடித்துள்ள மண்டாடி படம் செப்டம்பர் 10ம் தேதியில் வெளியாகிறது. இப்படங்கள் வெளியாகி 2 வாரத்திலே ஹிப்ஹாப் ஆதியின், மீசையமுறுக்கு 2 படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.