கூலி படத்தில் ரஜினிகாந்த் சாரை இப்படிதான் பாப்பீங்க… இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்
Coolie Movie: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் படம் கூலி. சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இந்த நிலையில் படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் கதாப்பாத்திரம் எப்படி இருக்கும் என்பது குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.

கோலிவுட் சினிமாவில் எந்த பெரிய இயக்குநர்களிடமும் உதவி இயக்குநராக பணிபுரியாமல் நேரடியாக சினிமாவில் இயக்குநர்களாக ஆனவர்களின் பட்டியல் மிகவும் குறைவு. அந்தப் பட்டியளில் உள்ளவர்தான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Director Lokesh Kanagaraj). இவர் தமிழ் சினிமாவில் 2016-ம் ஆண்டு முதலே இயக்குநராக இருக்கிறார். இவரது இயக்கத்தில் 2017-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான மாநகரம் படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இயக்குநராக லோகேஷ் கனகராஜை அறிமுகப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து இவரது இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான கைதி படம் தான் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலப்படுத்தியது. அதன்பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விக்ரம், விஜய், ரஜினிகாந்த் என இவர் இயக்கும் நடிகர்கள் எல்லாம் தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார்களாக இருந்தனர். இறுதியாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




கூலி படம் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
IT’S A WRAP FOR #COOLIE 💥 💥
What an incredible experience it has been travelling with @rajinikanth sir, @iamnagarjuna sir, @nimmaupendra sir, #SathyaRaj sir, #SoubinShahir sir, @shrutihaasan and the entire team 🤗🤗❤️❤️
Will forever cherish this amazing experience 🤗🙏 pic.twitter.com/yBuJ3wdEc1
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) March 18, 2025
ரஜினிகாந்தின் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படம்:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தற்போது கூலி என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். கூலி படத்தின் வெளியீட்டிற்கான இறுதிக்கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படத்தில் பான் இந்திய நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் கேமியோவாக மட்டும் இன்றி இவர்களுக்கு கதாப்பாத்திரங்கள் படத்தில் உள்ளது என்று முன்னதாக பேட்டி ஒன்றில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
கூலி படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் கதாப்பாத்திரம் குறித்து பேசிய லோகேஷ் கனகராஜ்:
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் சாரின் ஹீரோயிசமான விசயம் எல்லாருக்கும் பிடிக்கும். எனக்கும் பிடிக்கும். ஆனா அதவிட எனக்கு ரஜினிகாந்த் சாரிடம் உள்ள வில்லனிசம் ரொம்ப பிடிக்கும். இந்தப் படத்தில் என்னால அவர்கிட்ட இருந்து எவ்வளவு வில்லனிசம் காட்ட முடியுமோ அவ்வளவு காட்டியிருக்கேன் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.