Coolie : ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?
Coolie Audio Launch Update : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம்தான் கூலி. இப்படமானது ரிலீசிற்கு காத்திருக்கும் நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது, எங்கு நடைபெறவுள்ளது என்பதைப் பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் (Superstar Rajinikanth) முன்னணி நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் திரைப்படம்தான் கூலி (Coolie). இந்த படத்தைத் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரும், வருங்கால நடிகருமான லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கியுள்ளார். இந்த படமானது தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) லியோ (Leo) படத்தை தொடர்ந்து இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படமானது கடந்த 2023ம் ஆண்டு இறுதியில் ரஜினிகாந்த்தின் 171வது திரைப்படமாக அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அசத்தல் நாயகனாக, ஆக்ஷ்ன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். இப்படத்தில் நடிகர் ரஜினியுடன் முக்கிய வேடத்தில் நடிகர்கள் ஸ்ருதி ஹாசன் ( Shruti Haasan) , நாகார்ஜுனா (Nagarjuna), சத்யராஜ், ஷோபின் ஷாஹிர் மற்றும் உபேந்திர ராவ் இணைந்து நடித்துள்ளனர்.
மேலும் இப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் பாலிவுட் ஹிட் நடிகர் அமீர்கான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூலி படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீசை முன்னிட்டு வரும் 2025, ஜூலை 27ம் தேதியில் இந்த கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிவருகிறது.




சென்னையில் உள்ள நேரு உள்அரங்கத்தில் இந்த இசை வெளியீட்டு விழா (Coolie Audio launch event ) நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் பரவிவருகிறது. ஆனால் இது குறித்துப் படக்குழு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அறிவிப்புகள் மிக விரைவில் வெளியாகும் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கூலி படக்குழு வெளியிட்ட விநியோகம் தொடர்பான பதிவு :
Saridhaan, Mudichudalama!🔥 #Coolie Overseas distribution by @Hamsinient 🌏⚡#Coolie releasing worldwide August 14th @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan #CoolieFromAug14 pic.twitter.com/TsNPsPrjg8
— Sun Pictures (@sunpictures) June 30, 2025
ரஜினிகாந்த்தின் அதிரடி நடிப்பில் கூலி :
இந்த கூலி படத்திற்கு முன் ரஜினிகாந்த் வேட்டையன் என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படமானது கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. அதை அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இப்படத்தில் இணைந்துள்ளார். லோகேஷ் கனகராஜின் படங்கள் நிச்சயம் ரத்தம் தெறிக்கச் சண்டை காட்சிகள் இருக்கும். அந்த விதத்தில் நடிகர் ரஜினிகாந்த்தும் இப்படத்தில் தேவா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், ரஜினிகாந்த்தும் இதில் ஆக்ஷ்ன் நாயகனாக நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
சண்டைக் காட்சிகளிலும் ரஜினிகாந்த் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த கூலி படத்தில் முக்கிய வில்லனாக நாகார்ஜுனா நடித்திருக்கிறாராம். அவரே இதை பற்றி நேர்காணல் ஒன்றில் , கூறியிருந்தார் . மேலும் அமீர்கானும் இப்படத்தில் சுமார் 25 நிமிட கேமியோ ரோலில் நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜின் கைதி 2 திரைப்படத்தை அடுத்ததாக, புதிய படத்தில் அமீர்கானுடன் இணையவுள்ளார். இதை பற்றி இந்தி பேட்டி ஒன்றில் நடிகர் அமீர்கானும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.