Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

2025 தீபாவளிக்கு இந்த முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக வாய்ப்பு?

2025 Diwali Release: கோலிவுட் சினிமாவில் மாதம் மாதம் புதுப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வந்தாலும் தீபாவளி மற்றும் பொங்கல் என பண்டிகை என பண்டிகை காலங்களில் பெரிய நடிகர்களின் படங்கள் தொடர்ந்து வெளியாவது வழக்கம். அந்த வகையில் கோலிவுட் சினிமாவில் இந்த தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் படங்களின் தொகுப்பை தற்போது பாக்கலாம்.

2025 தீபாவளிக்கு இந்த முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக வாய்ப்பு?
படங்கள்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 30 Jun 2025 20:37 PM

டியூட்: நடிகர் பிரதீப் ரங்கநாதன் (Actor Pradeep Ranganathan) நாயகனாக நடிக்கும் படம் டியூட். இந்தப் படத்தை இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கி வருகிறார். இது இவர் இயக்குநராக அறிமுகம் ஆகும் முதல் படம் ஆகும். இந்தப் படத்தில் நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் இணைந்து இந்தப் படத்தில் நடிகர்கள் சரத்குமார், ஹிருது ஹாரூன் மற்றும் ரோகினி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ரொமாண்டிக் ஆக்‌ஷன் காமெடி பாணியில் தயாராகும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் ஆகியோர் இணைந்து தாரிக்கின்றனர். முன்னதாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போது இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கும் இந்தப் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு முன்னதாகவே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

கருப்பு: நடிகர் சூர்யாவின் நடிப்பில் 45-வது படமாக தயாராகி வரும் படம் கருப்பு. இந்தப் படத்தை இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வருகிறார். சூர்யா 45 என்று அழைக்கப்பட்ட இந்தப் படத்தின் டைட்டில் சமீபத்தில் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவின் ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடித்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஜோடியை திரையில் காண ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருப்பு படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு மற்றும் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். முன்னதாக பேட்டி ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் படம் பண்டிகை காலத்தில் வெளியாகும் என்று தெரிவித்து இருந்தார். இதன் மூலம் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சர்தார் 2: நடிகர் கார்த்தி நடிப்பில் முன்னதாக வெளியாகி வரவேற்பைப் பெற்றப் படம் சர்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகின்றது. இயக்குநர் ரத்னகுமார் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ரஜிஷா விஜயன், எஸ்.ஜே. சூர்யா , மாளவிகா மோகனன் மற்றும் ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள்னர். இந்தப் படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.