Idly Kadai: ரிலீசுக்கு தயாராகும் ‘இட்லி கடை’ படம்.. டப்பிங் பணிகள் தொடக்கம்!
Dhanush Started dubbing For Idly Kadai Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தனுஷ். இவரின் இயக்கத்தில் 4வது திரைப்படமாக உருவாகிவருவது இட்லி கடை திரைப்படம். இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் நிலையில், நடிகர் தனுஷ் இப்படத்தின் டப்பிங் பணியைத் தொடங்கியுள்ளார்.

இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என சினிமாவில் பல்வேறு திறமைகளை தன்னுள் வைத்திருப்பவர் தனுஷ் (Dhanush). இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் குபேரா (Kuberaa). தெலுங்கு மற்றும் தமிழ் மொழியை அடிப்படியாகக் கொண்டு உருவாகியிருந்த இப்படமானது, கடந்த 2025 ஜூன் 20ம் தேதியில் வெளியாகியிருந்தது. இப்படமானது கலவையான விமர்சனங்களைப் பெற்று திரையரங்குகளில் வெளியாகிவருகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து தமிழில் ரிலீசிற்கு காத்திருக்கும் படம்தான் இட்லி கடை (Idly Kadai) . இந்த படத்தை தனுஷே இயக்கி, அதில் முன்னணி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இதில் அவர் இரட்டை வேடத்தில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த இட்லி கடை திரைப்படத்தில் தனுஷ் முன்னணி நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் (Nithya Menon) நடித்துள்ளார். இந்த ஜோடி ஏற்கனவே திருச்சிற்றம்பலம் படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து இப்படத்திலும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவந்த நிலையில், நடிகர் தனுஷ் இன்று 2025, ஜூலை 1ம் தேதியில் தனது டப்பிங் பணியைத் (Dubbing work) தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இட்லி கடை படமானது பான் இந்திய படமாக உருவாகியிருக்கும் நிலையில், இப்படத்தின் வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




இட்லி கடை ரிலீஸ் தொடர்பாகப் படக்குழு வெளியிட்ட பதிவு :
The wait is over! 🍿🔥 Experience #IdlyKadai on the big screen worldwide from October 1st!
A Film by @dhanushkraja
A @gvprakash Musical
Produced by @AakashBaskaran & #Dhanush @Kiran10koushik #PrasannaGK @jacki_art @PeterHeinOffl #BabaBaskar @kavya_sriram #PraveenD #Nagu… pic.twitter.com/kjfDcZGUZ1— Wunderbar Films (@wunderbarfilms) April 4, 2025
இட்லி கடை படத்தின் ரிலீஸ் எப்போது ?
நடிகர் தனுஷின் இயக்கத்தில் 4வதாக உருவாகியிருக்கும் படம்தான் இட்லி கடை. இந்த படத்திற்கு முன் தனுஷ் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கியிருந்தார். புதுமுக நடிகர்களை வைத்து இயக்கியிருந்த இப்படமானது கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. இதை அடுத்தாக அவர் இயக்கியிருக்கும் படம்தான் இந்த இட்லி கடை. இந்த படமானது ஆரம்பத்தில் 2025, ஏப்ரல் 10ம் தேதியில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது.
பின் இப்படத்தின் ஷூட்டிங்கில் ஏற்பட்ட தாமதத்தினால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. அதைத் தொடர்ந்து இப்படமானது வரும் 2025, அக்டோபர் 1ம் தேதியில் வெளியாகும் எனப் படக்குழு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இன்னும் இப்படத்தின் ரிலீசிற்கு 2 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், படத்தின் டப்பிங் பணியும் ஆரம்பமாகியுள்ளது.
இட்லி கடை பட டப்பிங் :
இந்த இட்லி கடை படத்தின் ரிலீஸ் கிட்ட நெருங்கும் நிலையில், டப்பிங் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டப்பிங்கை நடிகர் தனுஷ் முதலில் ஆரம்பித்துள்ளார். இந்த திரைப்படத்தில் தனுஷுடன், நித்யா மேனன், அருண் விஜய், சமுத்திரக்கனி, ராஜ்கிரண் மற்றும் ஷாலினி பாண்டே இணைந்து நடித்துள்ளனர். மேலும் இப்படமானது கிராமம் மற்றும் கிக் பாங்க்சிங் தொடர்பான கதைக்களத்துடன் உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.