Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Dhanush: ‘தேரே இஷக் மெய்ன்’ பட ஷூட்டிங் ஓவர்.. தனுஷ் வெளியிட்ட பதிவு!

Tere Ishq Mein Movie Shooting Wraps Up : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், இயக்குநராகவும் இருந்து வருபவர் தனுஷ். இவரின் நடிப்பில் இந்தியில் உருவாகிவரும் படம்தான் தேரே இஷ்க் மெய்ன். இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததாக தனுஷ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தற்போது ரசிகர்கள் மத்தியில் இப்பதிவு வைரலாகி வருகிறது.

Dhanush: ‘தேரே இஷக் மெய்ன்’ பட ஷூட்டிங் ஓவர்.. தனுஷ் வெளியிட்ட பதிவு!
தேரே இஷ்க் மெய்ன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு Image Source: Instagram
barath-murugan
Barath Murugan | Published: 01 Jul 2025 11:09 AM

நடிகர் தனுஷின் (Dhanush) நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் படங்கள் வெளியாகி வருகிறது. மேலும் இவரின் நடிப்பில் இறுதியாகத் தெலுங்கில் வெளியான படம் தான் குபேரா (Kuberaa) . இந்த படத்தை இயக்குநர் சேகர் கம்முலா (Sekhar Kammula) இயக்கியிருந்தார். கடந்த 2025, ஜூன் 20ம் தேதியில் இப்படம் உலகமெங்கும் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து, தனுஷ் இணைந்த இந்தி திரைப்படம்தான் தேரே இஷ்க் மெய்ன் (Tere Ishq Mein). இந்த படத்தை இயக்குநர் ஆனந்த் எல் ராய் (Anand L. Roy) இயக்கிவந்தார். இவரின் இயக்கத்தில் பான் இந்திய திரைப்படமாக இந்த தேரே இஷ்க் மெய்ன் படமானது உருவாகிவருகிறது. இந்த படத்தில் தனுஷ் முன்னணி நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கிருதி சனோன் (Kriti Sanon) நடித்துள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2024ம் ஆண்டு இறுதி முதல் நடந்து வந்த நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாக தனுஷ் அறிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தைப் பகிர்ந்து, நடிகர் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். தற்போது இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தேரே இஷ்க் மெய்ன் பட ஷூட்டிங் நிறைவுபெற்றதாக அறிவித்த தனுஷ் :

 

View this post on Instagram

 

A post shared by Dhanush (@dhanushkraja)

தேரே இஷ்க் மெய்ன் திரைப்படம் :

இந்த தேரே இஷ்க் மெய்ன் திரைப்படத்தை இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே தனுஷின் ராஞ்சனா படத்தை இயக்கியுள்ளார். கடந்த 2013ம் ஆண்டு இப்படம் தமிழில் அம்பிகாபதி என்று ரிலீசானது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தைத் தொடர்ந்து சுமார் 12 வருடங்களுக்குப் பின் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த தேரே இஷ்க் மெய்ன் திரைப்படமும், அதிரடி ஆக்ஷ்ன் மற்றும் காதல் கதைக்களத்துடன் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு பான் இந்தியப் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இவர்தான் தனுஷின் அம்பிகாபதி படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த தேரே இஷ்க் மெய்ன் படமானது வரும் 2025, நவம்பர் 27ம் தேதியில் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் தமிழ் ரிலீஸ் படம் :

நடிகர் தனுஷின் நடிப்பில் குபேராவை தொடர்ந்து ரிலீசிற்கு காத்திருக்கும் திரைப்படம் இட்லி கடை. இந்த படத்தை தனுஷ் இயக்கி. அதில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் நடித்துள்ளார்.

இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட வேலையில் இருந்து வருகிறது. இப்படமானது  வரும் 2025, அக்டோபர் 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த 2025ம் ஆண்டு தனுஷின் நடிப்பில் வெளியாகும் 2வது படமாக இது உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.