AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழ் கடவுளான முருகனாக நடிக்கும் நடிகர் ஜூனியர் என்டிஆர்

Jr NTR is to act as Tamil God Lord Murugar | தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜூனியர் என்டிஆர். இவர் தற்போது நடித்து வரும் படத்தில் தமிழ் கடவுளான முருகராக நடித்து வருவதாக கூறப்படுகின்றது.

தமிழ் கடவுளான முருகனாக நடிக்கும் நடிகர் ஜூனியர் என்டிஆர்
ஜூனியர் என்டிஆர் மற்றும் இயக்குநர் திரிவிக்ரம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Jun 2026 14:03 PM IST

தெலுங்கு சினிமாவில் என்டிஆரின் வாரிசாக அறிமுகம் ஆனவர் நடிகர் ஜூனியர் என்டிஆர். வாரிசு நடிகராக அறிமுகம் ஆகி தற்போது உச்ச நடிகராக வலம் வருகிறார் நடிகர் ஜூனியர் என்டிஆர். இவரது நடிப்பில் தெலுங்கு சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து மாபெரும் வெற்றியைப் பெற்று வருகின்றது. தெலுங்கு சினிமாவில் மட்டும் இன்றி உலக அளவில் அதிகப்படியான ரசிகர்களை வைத்துள்ளார் ஜூனியர் என்டிஆர். தொடர்ந்து விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் ஜூனியர் என்டிஆர் படங்கள் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் தேவாரா பாகம் ஒன்று. தெலுங்கு சினிமாவில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடித்து வரும் நடிகர் ஜூனியர் என்டிஆர் அவ்வபோது மற்றப் மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். அதன்படி இந்தி மொழியில் சமீபத்தில் வெளியான வார் 2 படத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகும் படம் தொடர்பான அப்டேட் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழ் கடவுளான முருகனாக நடிக்கும் நடிகர் ஜூனியர் என்டிஆர்:

‘காட் ஆஃப் வார்’ படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் தமிழ்க் கடவுளான முருகராக நடிக்கிறார். இப்படத்தை த்ரிவிக்ரம் இயக்குகிறார். புராணங்கள், மாபெரும் போர்கள், தெய்வீக சக்திகள், குடும்ப உறவுகள் மற்றும் ஆன்மீகக் குறியீடுகள் ஆகியவற்றை இணைக்கும் இக்கதையில், முருகன் போர்க்கலையையும் ஞானத்தையும் ஒருங்கே பிரதிபலிக்கிறார். இப்படம் எப்படி இருக்கப்போகிறது என்று பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… சூர்யா 47 படம் குறித்து இசையமைப்பாளர் சொன்ன முக்கிய விசயம்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… தலைவரே மைக்-ஆ பிடிச்சி உண்மைய சொல்லவேண்டிய நிலை.. சர்ச்சையை கிளப்பிய விஷ்ணு விஷால்!

Follow Us