AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சூர்யா 47 படம் குறித்து இசையமைப்பாளர் சொன்ன முக்கிய விசயம்

Music Director Sushin Shyam Recent Interview | தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக விறுவிறுப்பாக உருவாகி வரும் படம் சூர்யா 47. இந்தப் படம் குறித்து படத்தின் இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் சமீபத்திய பேட்டியில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சூர்யா 47 படம் குறித்து இசையமைப்பாளர் சொன்ன முக்கிய விசயம்
சுஷின் ஷியாம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 27 Jun 2026 16:47 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் சமீபத்தில் கருப்பு படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இயக்குநர் வெங்கி அட்லூரி இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. முன்னதாக இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான லக்கி பாஸ்கர் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. மேலும் இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் அடுத்ததாக நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் 47-வது படம் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. அந்த வகையில் படத்தின் இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் சமீபத்தில் பேட்டி ஒன்றி சூர்யா 47 படம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சூர்யா 47 படம் குறித்து இசையமைப்பாளர் சொன்ன முக்கிய விசயம்:

சூர்யா 47 படத்திற்காக நான் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறேன். பாலன் படத்திற்குப் பிறகு, இசை ரீதியாக சூர்யா 47 எனக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு அனுபவமாக அமைகிறது. இதன் இசைத் தொகுப்பு மிகவும் சுவாரஸ்யமாகவும், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாகவும், அதே சமயம் வணிக ரீதியான பாணியிலும் இருக்கும். ஆவேஷம் படத்தில் இருந்த துடிப்பான இசைத்தன்மைகள் இதிலும் இடம்பெறுவதால், அதே சமயம் இது புதுமையாகவும் இருக்க வேண்டும் என்பதையும், முன்பு செய்தவற்றையே மீண்டும் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதையும் உறுதி செய்வது எனக்கு ஒரு சவாலாக உள்ளது. இது எனது முதல் தமிழ்ப் படம் என்பதால், தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற வகையில் ஒரு சிறந்த இசைத் தொகுப்பை உருவாக்க எனது முழு முயற்சியையும் அளித்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… பாகுபலி 3 படம் உருவாக உள்ளதா? வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… எப்புட்றா இவகூட நாளு வருஷம் ரிலேஷன்ஷிப்ல இருந்த – வெளியானது லவ் ஓ லவ் படத்தின் ட்ரெய்லர்

Follow Us