பாகுபலி 3 படம் உருவாக உள்ளதா? வைரலாகும் தகவல்
Baahubali 3 is happening | உலகம் முழுவதும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது பாகுபலி பாகம் ஒன்று மற்றும் பாகுபலி பாகம் இரண்டு. இந்தப் படத்தின் மூன்றாம் பாகம் உருவாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி. இவரது இயக்கத்தில் இதுவரை வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பிசியான இயக்குநராக வலம் வரும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலில் இயக்கத்தில் முன்னதாக தமிழ் சினிமாவில் பாகுபலி பாகம் ஒன்று மற்றும் பாகுபலி பாகம் இரண்டு ஆகியப் படங்கள் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு பாகங்களும் உலகம அளவில் தெலுங்கு சினிமாவை பிரபலப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த இரண்டு பாகங்களையும் இணைத்து ஒரே படமாக படக்குழு வெளியிட்டது. அந்தப் படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் நடிகர் பிரபாஸ் அப்பா மற்றும் மகன் என இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார். அதில் அப்பா பிரபாஸிற்கு நடிகை அனுஷ்கா ஜோடியாக நடித்து இருந்த நிலையில் மகன் பிரபாஸிற்கு ஜோடியாக நடிகை தமன்னா பாட்டியா நடித்து இருந்தார். மேலும் வில்லனாக நடிகர் ராணா நடித்து இருந்த நிலையில் அவர்களுடன் இணைந்து நடிகர்கள் ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகுபலி 3 படத்தை உறுதி செய்த படக்குழு:
மேலும் இந்தப் படக்குழுவினர் நெஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் நடத்திய பாகுபலி தி டார்ச்பேரர் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினர். அப்போது பாகுபலி படத்தின் படப்பிடிப்பின் போது நிகழ்ந்த நிகழ்வுகளை வெளிப்படையாக பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். அந்த வீடியோவில் பாகுபலி 3 படம் உருவாக உள்ளது குறித்தும் அவர்கள் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… தமிழ் நாட்டில் மட்டும் கருப்பு படத்தின் மொத்த வசூல் இவ்வளவா? வைரலாகும் தகவல்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Baahubali3 is ON ✅🔥
“The world 🌎 may not be ready yet, but there’ll be more #Baahubali… Baahubali…..3.”
— #RanaDaggubati pic.twitter.com/CxxkI4NqlI— Movies Singapore (@MoviesSingapore) June 26, 2026
Also Read… லால் சலாம் படத்தில் நடிக்க இதுதான் காரணம் – விஷ்ணு விஷால்



