AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பாலன் படத்தின் தாக்கத்திலிருந்து இன்னும் நான் முழுமையாக மீளவில்லை – நடிகர் சூர்யா

Actor Suriya talks about Balan movie | மலையாள சினிமாவில் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் படம் பாலன் தி பாய். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் சூர்யா வெளியிட்ட பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பாலன் படத்தின் தாக்கத்திலிருந்து இன்னும் நான் முழுமையாக மீளவில்லை – நடிகர் சூர்யா
பாலன் படக்குழுவினர் உடன் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Jun 2026 12:27 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக வரிசைக் கட்டி காத்திருக்கின்றது. இந்த நிலையில் நடிகர் சூர்யா தொடர்ந்து படப்பிடிப்புகளில் பிசியாக வலம் வந்தாலும் பான் இந்திய மொழிகளில் வெளியாகும் புதுப் புதுப் படங்களைப் பார்த்துவிட்டு அந்தப் படம் நன்றாக இருந்தால் அதனை பாராட்டவும் அவர் தயங்கியதில்லை. அப்படி அவர் சமீபத்தில் பார்த்துவிட்டு தற்போது மனதாரா பாராட்டிய படம் மலையாள சினிமாவில் வெளியான பாலன் தி பாய். இயக்குநர் சிதம்பரம் இந்தப் படத்தை இயக்கி இருந்த நிலையில் இயக்குநர் ஜித்து மாதவன் திரைக்கதையை எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படம் கடந்த 19-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு மலையாள சினிமாவில் வெளியானது. இந்தப் படத்தில் நடிகர்கள் ஆதிசேஷன் கே.ஆர்., ஃபர்சானா பாலதிங்கல், முஹம்மது ஜினான், டொவினோ தாமஸ், கிரிஷ் ஏ. டி., ஜீன் பால் லால் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்தை நேற்று நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி நடிகை ஜோதிகா படக்குழுவினர் உடன் இணைந்து பார்த்தனர். இந்தப் படம் குறித்து சூர்யா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மலையாளத் திரையுலகின் மற்றொரு மிகச்சிறந்த படைப்பு இது:

பாலன் திரைப்படத்தைப் பார்த்தேன். அதன் தாக்கத்திலிருந்து இன்னும் நான் முழுமையாக மீளவில்லை. மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்குப் பிறகு, இது போன்ற ஒரு படத்தைத் தேர்ந்தெடுத்ததிலிருந்தே, சிதம்பரமும் அவரது குழுவினரும் நமக்கு எத்தகைய படைப்பை வழங்க விரும்பினார்கள் என்பது தெளிவாகிறது. மலையாளத் திரையுலகின் மற்றொரு மிகச்சிறந்த படைப்பு இது. ஜித்து மாதவனின் தனித்துவமான கதையைத் தேர்ந்தெடுத்த இயக்குநருக்குப் பெரிய பாராட்டுக்கள்.

குறிப்பாக, பெரும்பாலும் அறிமுக நடிகர்களைக் கொண்டு, கணிக்க முடியாத ஒரு கதையை இவ்வளவு சிறப்பாக உருவாக்கியிருப்பதுதான் இப்படத்தின் சிறப்பம்சம். நடிப்பு, திரைக்கதை, ஒளிப்பதிவு, இசை, கலை இயக்கம் மற்றும் ஒலி வடிவமைப்பு எனப் படத்தின் ஒவ்வொரு அம்சமும் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது… உண்மையிலேயே மனதை நெகிழ வைக்கும் அனுபவம். இந்த அறிமுக நடிகர்களின் நடிப்பைப் பார்த்தபோது, ​​எனது சொந்தத் திறமைகளையும் நான் இன்னும் மெருகேற்றிக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது.
முழு குழுவிற்கும் வாழ்த்துகள்.

Also Read… இனி இவரு என்ன பண்ணப்போறாரு – தனக்காக வருத்தப்பட்ட ரஜினி – கமல்ஹாசன் உருக்கம்

நடிகர் சூர்யா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… செப்டம்பர் மாதம் ரிலீஸ் தேதியை லாக் செய்தது சர்தார் 2 படக்குழு – அப்டேட் இதோ

Follow Us