AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரிலீஸ் தேதியை லாக் செய்தது லவ் ஓ லவ் படக்குழு – வைரலாகும் அப்டேட்

Pavishs Love Oh Love Movie Release Update | தமிழ் சினிமாவில் இளம் நடிகர் பவிஷ் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் லவ் ஓ லவ். இந்தப் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு தற்போது வெளியிட்டு உள்ளது.

ரிலீஸ் தேதியை லாக் செய்தது லவ் ஓ லவ் படக்குழு – வைரலாகும் அப்டேட்
லவ் ஓ லவ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 23 Jun 2026 14:18 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக உள்ள கஸ்தூரி ராஜாவின் மகன் வழி பேரன் தான் நடிகர் பவிஷ். இவர் கடந்த 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தை எழுதி இயக்கியது பவிஷின் தாய் மாமன் நடிகர் தனுஷ். நடிகர் தனுஷ் நடிக்காமல் முழுக்க முழுக்க மற்ற நடிகர்கள் நடிப்பில் வெளியான முதல் படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் 2கே இளைஞர்களின் காதலை மையமாக வைத்து வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் பவிஷ் நடிப்பில் வெளியாக உள்ள அடுத்தப் படம் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல கவனத்தை ஈர்த்து வந்தது. அதன்படி பவிஷ் நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் லவ் ஓ லவ்.

ஜூலை மாதம் வெளியாகிறது லவ் ஓ லவ் படம்:

இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கி உள்ள படம் லவ் ஓ லவ். இந்தப் படத்தில் நடிகர் பவிஷ் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை நாக துர்கா நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் செல்வராகவன், கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் வனிதா விஜயகுமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வந்த நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படம் வருகின்ற ஜூலை மாதம் 10-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… காதலுக்கு மரியாதை டூ நண்பன் – தளபதி விஜய் நடித்த ரீமேக் படங்களின் லிஸ்ட் இதோ

லவ் ஓ லவ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… சினிமாவில் 23 ஆண்டுகளைக் கடந்த ரவி மோகன் – கொண்டாடும் திரையுலகினர்

Follow Us