கெணத்த காணோம் படம் வெறும் காமெடி மட்டும் இல்ல… ஓடிடியில் மிஸ் செய்யாதீர்கள்!
Kenatha Kanom movie ott review here | தமிழ் சினிமாவில் நடிகர் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றப் படம் கெணத்த காணோம். இந்தப் படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக உள்ள நடிகர் யோகி பாபு அவ்வபோது கதையின் நாயகனாகவும் நடித்து உள்ளார். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பான்மையான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன்படி நடிகர் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்து சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் கெணத்த காணோம். இந்தப் படத்தை இயக்குநர் சுரேஷ் சங்கையா எழுதி இயக்கி உள்ளார். காமெடி சட்டையர் பாணியில் உருவான இந்தப் படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது தொடர்ந்து இந்தப் படத்தை படக்குழுவினர் தற்போது ஓடிடியில் வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் இது வெறும் காமெடி மட்டும் இல்லை முக்கியமான கருத்தும் இந்தப் படத்தில் உள்ளது என்பதை தெரிவித்து வருகின்றனர்.
இந்தப் படத்தில் நடிகர் யோகி பாபுவிற்கு ஜோடியாக நடிகை லவ்லின் சந்திரசேகர் நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
கெணத்த காணோம் படத்தின் கதை என்ன?
மழையே இல்லாமல் வரட்சியில் இருக்கும் கிராமத்தினர் தொடர்ந்து மழை வேண்டி பல பூஜைகளை நடத்தி வருகின்றனர். குடிக்க தண்ணீ கூட இல்லாமல் பல கிலோமீட்டர் தூரம் சென்று எடுத்து வரும் நிலமை உள்ளது. இப்படி இருக்கும் சூழலில் அந்த ஊரில் கோவில் பூசாரியாகவும் சிற்ப கலைஞராகவும் உள்ள யோகி பாபுவின் வீடு இருக்கும் இடத்தில் தான் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்து கிணறு தோண்டுகின்றனர்.




கிணறு தோண்டிய போது தண்ணீர் வருவதற்கு பதிலாக டைனோசரின் படிவம் கிடைக்கின்றது. இதனை அறிந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அந்த இடத்தை கட்டுபாட்டில் கொண்டுவந்து அதனை ஆராய்ச்சி செய்கின்றனர். ஆனால் அந்த கிராமத்து மக்களின் தண்ணீர் பிரச்சனையை நீக்க அவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
இந்த ஆராய்ச்சியின் போது யோகி பாபுவின் வீடு இடிந்து அவரது தாத்தா சுதந்திர போராட்ட தியாகி உயிரிழந்துவிடுகிறார். இதனால் அரசு மீது கோபமடையும் யோகி பாபு என்ன செய்தார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… தளபதிக்கு தங்கையாக நடித்தவர்.. இந்த போட்டோவில் இருப்பது எந்த நடிகை-னு தெரியுமா?