AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தளபதிக்கு தங்கையாக நடித்தவர்.. இந்த போட்டோவில் இருப்பது எந்த நடிகை-னு தெரியுமா?

Kollywood Actress childhood photo: சினிமாவில் நடிகர்கள் மற்றும் நடிகைகளில் சிறுவயது அடையாள தெரியாத புகைப்படங்கள் வெளியாகிவருவது தெரியும். அந்த விதத்தில் இந்த போட்டோவில் இருக்கும் நடிகை யார் தெரிகிறதா?. இவர் விஜய் முதல் விஜய் சேதுபதி போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். இது பற்றி விவரமாக பார்க்கலாம்.

தளபதிக்கு தங்கையாக நடித்தவர்.. இந்த போட்டோவில் இருப்பது எந்த நடிகை-னு தெரியுமா?
தமிழ் நடிகையின் சிறுவயது புகைப்படம்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 20 Jun 2026 08:29 AM IST

சமூக ஊடகங்களில் அவ்வப்போது நடிகர்கள் மற்றும் நடிகைகளின் அறியப்படாத புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பகிரப்பட்டுவருகிறது. அந்த விதத்தில் மேலே உள்ள போட்டோவில் இருக்கும் சிறுமி எந்த நடிகை என தெரியுமா?. தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி தீயாக பரவிவருகிறது. இந்த நடிகை கடந்த 2015ம் ஆண்டில் மலையாள சினிமாவின் (Malayalam Cinema) மூலமாக கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டவர். இவரின் முதல் படத்தை இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் (Alphonse Putran) இயக்கியிருந்தார். அந்த படத்தின் மூலம் இவருக்கு ஒட்டுமொத்த தென்னிந்திய மக்கள் மத்தியில் பிரபலம் கிடைத்தது. இதையடுத்து மலையாளம் சினிமாவில் நாயகியாக நடித்து ஹிட் கொடுத்துவந்தார். பின் தமிழில் விஜய் சேதுபதிக்கு (Vijay Sethupathi) ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.

இப்படம் இவருக்கு ஓரளவு நல்ல வரவேற்பையே கொடுத்தது. இதையடுத்து பிரபு தேவா முதல் தளபதி விஜய் வரை பல்வேறு பிரபலங்களுடனும் இணைந்து நடித்துள்ளார். குறிப்பாக சொல்லப்போனால் தளபதி விஜயின் (Thalapathy Vijay) தங்கையாக படத்தில் நடித்தவர் இவர். அட இந்த நடிகை வேறுயாருமில்லை மலையாள நடிகை மடோனா செபாஸ்டியன்தான் (Madonna Sebastian).

இதையும் படிங்க: முக்கோண காதல் கதையில்… மடோனா செபாஸ்டியன் நடித்துள்ள ஹார்ட்டின் பட ட்ரெய்லர் வெளியானது!

நடிகை மடோனா செபாஸ்டியனின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

நடிகை மடோனா செபாஸ்டியனின் சினிமா வாழ்க்கை :

இவர் கடந்த 2015ம் ஆண்டில் மலையாளத்தில் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் என்ற படத்தின் மூலம் நாயகியக அறிமுகமானார். இதில் நிவின் பாலியை திருமணம் செய்துகொண்ட “செலின்” என்ற வேடத்தில் இவர் நடித்திருந்தார். இதன் மூலம் இவருக்கு தமிழ் மற்றும் மலையாளம் மக்கள் மத்தியில் பிரபலம் கிடைத்தது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து மலையாளத்தில் அடுத்தடுத்த படங்களில் நாயகியாக நடித்தார். அந்த வகையில் தமிழில் இயக்குநர் நலன் குமாரசாமியின் இயக்கத்தில், காதலும் கடந்து போகும் என்ற படத்தில், விஜய் சேதுபதி ஜோடியாக நடித்து அறிமுகமானார்.

இதையும் படிங்க: விஷாலின் மகுடம் திரைப்பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘ரைஸ் ஆப் லிங்கா’ வெளியானது!

இதன் பிறகு அடுத்தடுத்த படங்களில் நடிக்க தொடங்கியிருந்தார். மேலும் லியோ படத்தில் தளபதி விஜய்யின் தங்கையாகவும் நடித்திருந்தார். பின் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக தமிழில் பெரிதாக படம் எதிலும் நடிக்கவில்லை. இதையடுத்து மீண்டும் நடித்துள்ள புது படம்தான் ஹார்ட்டின். ரோமெண்டிக் காதல் கதைக்களத்தில் இப்படமானது உருவாகியிருக்கிறது. இதன் பிறகும் மலையாளத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us