AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Magudam: விஷாலின் மகுடம் திரைப்பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘ரைஸ் ஆப் லிங்கா’ வெளியானது!

Magudam Movie Rise Of Linga Song: விஷாலின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் மகுடம். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில், இப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ரைஸ் ஆப் லிங்கா என்ற இப்பாடல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Magudam: விஷாலின் மகுடம் திரைப்பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘ரைஸ் ஆப் லிங்கா’ வெளியானது!
ரைஸ் ஆஃப் லிங்கா பாடல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 19 Jun 2026 19:13 PM IST

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 வருடங்களாக கதாநாயகனாக சினிமாவில் நடித்துவருபவர் விஷால் (Vishal). இவரின் நடிப்பில் இதுவரை பல படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை கொடுத்திருக்கிறது. இத்தனை காலமாக ஹீரோவாக படங்களில் நடித்துவந்த இவர், இயக்குநராக இயக்கியுள்ள புதிய திரைப்படம்தான் மகுடம் (Magudam Movie). இப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகும் விஷால், இப்படத்தின் கிட்டத்தட்ட மூன்று வேடங்களில் நடித்துள்ளார். இப்படமானது ஆரம்பத்தில் ரவி அரசு (Ravi Arasu) இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பின் அவர் இப்படத்தின் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். இதில் விஷாலுடன் நடிகர்கள் அஞ்சலி (Anjali), துஷாரா விஜயன் (Dushara Vijayan) போன்ற பிரபலங்களும் இணைந்து நடித்துள்ள நிலையில், படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாகி உள்ளது.

இப்படத்திற்கு தென்னிந்திய பிரபலம் மற்றும் தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் (GV Prakash Kumar) இசையமைத்துள்ளார். இந்நிலையில், இன்று 2026ம் ஆண்டு ஜூன் 19ம் தேதியில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. “ரைஸ் ஆப் லிங்கா” (Rise Of Linga) என்ற இப்பாடலை ஜி.வி.பிரகாஷ் மற்றும் வினோத் அக்க என்னவர் இணைந்து பாடியுள்ளார்.

இதையும் படிங்க: கார்த்திக் சுப்புராஜ் அடுத்து இயக்கும் ஹீரோ இவரா? வில்லனும் இவர்தான்!

மகுடம் திரைப்படத்தின் முதல் பாடல் குறித்து நடிகர் விஷால் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த ரைஸ் ஆப் லிங்கா பாடலை ஜி.வி.பிரகாஷ் மற்றும் அறிமுக ரப்பர் வினோத் அக்க என்பவர் இணைந்து பாடியுள்ளார். இது விஷால் நடித்திருக்கும் லிங்கா என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்திற்கான அறிமுக பாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. இதை இயக்குநராக விஷால் இயக்கியுள்ள நிலையில், கிட்டத்தட்ட பிரம்மாண்டமான பட்ஜெட்டில் படம் உருவாகியுள்ளதாம். விஷாலின் மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்கு பிறகு, இப்படம் நிச்சயம் வரவேற்கப்படும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: யூசுப் கேரக்டராகவே முழுமையாக வாழ்ந்திருக்கும் என்னுடைய அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன் – ஹபீபி படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டிய நடிகர் தனுஷ்

இதில் விஷால் லிங்கா, மெடிக்கல் ரெப் மற்றும் இளம் பருவ லிங்கா என கிட்டத்தட்ட 3 வேடங்களில் நடித்துள்ளார். இதில் அஞ்சலியும் அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடித்திருக்கும் நிலையில், படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இப்படமானது சிறப்பாக தயாராகியுள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஜூலை மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. விரைவில் இதன் ரிலீஸ் தேதியும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us