கார்த்திக் சுப்புராஜ் அடுத்து இயக்கும் ஹீரோ இவரா? வில்லனும் இவர்தான்!
Karthik Subbaraj New Movie: கோலிவுட் மக்கள் மத்தியில் வித்தியாசமான படங்களை இயக்கி பிரபலமானவர் கார்த்திக் சுப்புராஜ். இவரின் இயக்கத்தில் புதிதாக படம் ஒன்று உருவாகியுள்ள நிலையில், தற்போது பிரபல நடிகர் ஒருவரின் படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது யார் என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் (Karthik Subbaraj) கோலிவுட் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் தீவிர ரஜினிகாந்தின் (Rajinikanth) ரசிகரும் கூட. இவர் ரஜினியுடன் பேட்ட என்ற படத்தை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்திருந்தார். இவரின் இயக்கத்தில் இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் தி ஒன் சூர்யா (The One Suriya) வரை பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். அந்த வகையில் இறுதியாக வெளியான படம் ரெட்ரோ (Retro). இதில் சூர்யா நடித்திருந்த நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக புதுமுக நடிகர்களை கொண்டு படம் ஒன்றை இயக்கியுள்ள நிலையில், அதற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருவருகிறார்.
இந்த படத்தை அடுத்ததாக பிரபல தமிழ் மற்றும் கன்னட நடிகரை கொண்டு புது படத்தை இவர் இயக்கவுள்ளாராம். தற்போது அந்த படம் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. கார்த்திக் சுப்புராஜுடன் அடுத்த படத்தில் இணையும் தமிழ் நடிகர் வேறுயாருமில்லை அதர்வாதான்.




இதையும் படிங்க: முக்கோண காதல் கதையில்… மடோனா செபாஸ்டியன் நடித்துள்ள ஹார்ட்டின் பட ட்ரெய்லர் வெளியானது!
கார்த்திக் சுப்புராஜ் – அதர்வா கூட்டணியில் இணையும் கன்னட நடிகர்:
கார்த்திக் சுப்புராஜ், நடிகர் அதர்வாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளாராம். இப்படமானது அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் தயாராகவுள்ளதாம். இதில் பிரபல கன்னட நடிகரான உபேந்திரா முக்கிய வில்லனாக நடிக்கிறாராம். இவர் ஏற்கனவே ரஜினிகாந்தின் கூலி படத்தில் காளி என்ற வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.
இதையும் படிங்க: யூசுப் கேரக்டராகவே முழுமையாக வாழ்ந்திருக்கும் என்னுடைய அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன் – ஹபீபி படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டிய நடிகர் தனுஷ்
மேலும் இதில் அதர்வாவின் தந்தையாக பிரபு தேவா நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளதாம். இன்னும் இதன் தயாரிப்பு நிறுவனம் எது என உறுதியாகவில்லை என தகவல் தெரிவிக்கிறது.
கார்த்திக் சுப்புராஜின் புதிய திரைப்படம் குறித்து வைரலாகும் எக்ஸ் பதிவு:
#KarthikSubbaraj ‘s Next Film..💥 #Atharvaa as the Lead and #Upendraa as the Villain..👌 #Prabhudeva To play as father of Atharvaa in the film..⭐ Fresh set of casting from Karthik Subbaraj..🤝 ©Vp
Currently he’s working on his Indie film.. The film has been completed and… pic.twitter.com/N7ZNPi9pqe
— Laxmi Kanth (@iammoviebuff007) June 19, 2026
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிதாக படம் ஒன்று உருவாகியுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், வித்தியாசமான கதையில் படம் தயாராகியுள்ளதாம். இதற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துவரும் நிலையில், படத்தின் அப்டேட்டும் விரைவில் வெளியாகும். இப்படத்தை முடித்தபிறகே அதர்வாவை கைது புது படத்தை இயவர் இயக்குவார் என கூறப்படுகிறது.