AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Vekkai: நைட்டு நிலா.. ஜி.வி.பிரகாஷின் வெக்கை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

Nightu Nila Song: சவுத் இந்திய சினிமாவில் தேசிய விருது வென்று, புகழ்பெற்ற இசையமைப்பாளராக இருப்பவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் இவர் நடித்துள்ள புதிய படம்தான் வெக்கை. இப்படமானது விரைவில் வெளியாக தயாராகிவரும் நிலையில், இப்படத்தின் முதல் பாடலான நைட்டு நிலா என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Vekkai: நைட்டு நிலா.. ஜி.வி.பிரகாஷின் வெக்கை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!
நைட்டு நிலாImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 19 Jun 2026 14:48 PM IST

கோலிவுட் மக்கள் மத்தியில் இசையமைப்பாளராகவும், புகழ்பெற்ற நடிகராகவும் இருப்பவர் ஜி.வி.பிரகாஷ் குமார் (GV Prakash Kumar). இவர் டார்லிங் (Darling) என்ற படத்தின் மூலம் ஹீரோவாக படங்களில் நடிக்க தொடங்கிய நிலையில், தற்போதுவரை கிட்டத்தட்ட 25-க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் 100-க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைப்பாளாராகவும் பணியற்றியுள்ளார். இந்த வரிசையில் புகழ்பெற்ற இயக்குநர் பா. ரஞ்சித்தின் (Pa. Ranjith) தயாரிப்பில் புதிதாக இவர் நடித்துள்ள படம்தான் வெக்கை (Vekkai). இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஆக்ஷன் நாயகனாக நடிக்க, அவருடன் அறிமுக நடிகை ஷிவானி ராஜசேகர் (Shivani Rajashekar) என்பவர் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் அக்கிரன் மோசஸ் (Akiran Moses) என்பவர் இயக்கியுள்ளார்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமாரே இசையமைப்பாளராக பணியாற்றிவரும் நிலையில், இப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. “நைட்டு நிலா” (Nightu Nila) என்ற முதல் பாடலானது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவிவருகிறது.

இதையும் படிங்க: தரமான சம்பவம் லோடிங்… வைரலாகும் அரசன் படத்தின் அப்டேட்

ஜி.வி. பிரகாஷின் வெக்கை பட நைட்டு நிலா பாடல் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

இந்த நைட் நிலா என்ற பாடலை ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, பாடகர் கானா பாலா பாடியுள்ளார். மேலும் இப்பாடலின் வரிகளை பாடகரும், பாடலாசிரியருமான அறிவு எழுதியுள்ள நிலையில், சிறப்பான வரிகளில் இப்பாடலானது உள்ளது. தற்போது வெளியான இந்த படலானது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவிவருகிறது.

இதையும் படிங்க: எங்கள் தங்கம் பட ரிலீஸ்.. கணவருடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த சமந்தா!

வெக்கை படத்தின் ரிலீஸ் எப்போது:

இந்த வெக்கை படமானது வாகனம் சம்பந்தமான கிரைம் திரில்லர் கதைக்களத்தில் தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஜி.வி. பிரகாஷ் ஹீரோவாக நடிக்க, மஞ்சுமெல் பாய்ஸ் பட புகழ் ஸ்ரீநாத் பாசி என்பவர் இதில் வில்லனாக நடித்துள்ளார். அதிரடி, மற்றும் கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள நிலையில், இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த வெக்கை படத்தை வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாத இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இது பற்றி அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது.

Follow Us