கே ட்ராமா ரசிகரா நீங்க… ஒரு சூப்பரான ஸ்கூல் ஆக்ஷன் ட்ராமா வெப் சீரிஸ் இதோ – டீச் யு எ லெசன் தொடனை மிஸ் செய்யாதீர்கள்
Teach You a Lesson web series | இணையதள தொடர்களில் அதிக அளவில் மக்களிடையே வரவேற்பைப் பெறுவது கொரிய மொழி தொடர்கள் ஆகும். அவை அதிக அளவில் ரொமாண்டிக் ஃபேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்து இருக்கும். ஆனால் இந்த டீச் யு எ லெசன் தொடர் ஒரு ஸ்கூல் ஆக்ஷன் ட்ராமாவாக வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இந்திய மக்களிடையே கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு ஓடிடியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்திய மொழிகளில் வெளியாகும் படங்களை மட்டும் இன்றி உலக் அளவில் பல மொழிகளில் வெளியாகும் படங்கள் மற்றும் இணையதள தொடர்களை பார்ப்பதில் அவர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மன அழுத்தம் நிறைந்த இந்த வாழ்க்கையில் பார்க்கும் படங்கள் அல்லது இணையதள தொடர்கள் மனதை வருடுவது போல இருக்க வேண்டும் என்று பார்வையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதன் காரணமாக ஃபீல் குட் படங்கள் மற்றும் தொடர்கள் மக்களிடையே அதிக ஈர்ப்பை பெறுகின்றது. இதில் குறிப்பாக கொரிய மொழியில் வரும் படங்கள் மற்றும் தொடர்கள் இந்திய மக்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அப்படி கொரிய மொழியில் உருவாகி தற்போது இந்திய மக்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வரும் தொடர் தான் டீச் யு எ லெசன்.
ஸ்கூல் ஆக்ஷன் ட்ராமா பாணியில் உருவாகி உள்ள இந்த டீச் யு எ லெசன் இணையதள தொடரை இயக்குநர் ஹோங் ஜோங்-சான் இயக்கி உள்ளார். இந்த தொடரில் நடிகர்கள் கிம் மு-யோல், லீ சுங்-மின், ஜின் கி-ஜூ, பியோ ஜி-ஹூன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் மொத்த 10 எபிசோடுகளைக் கொண்ட இந்த இணையதள தொடர் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த தொடர் குறித்து தற்போது பார்க்கலாம்.
டீச் யு எ லெசன் இணையதள தொடரின் கதை என்ன?
கொரியாவில் உள்ள பள்ளிகளை நடைபெறும் சட்டவிரோதமான செயல்கள் மற்றும் மாணவர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை தடுக்கும் நோக்கில் அந்த நாட்டின் கல்வி அமைச்சர் லீ சுங்-மின் ஒரு கல்வி உரிமைப் பாதுகாப்புப் பணியகம் (ERPB) என அமைப்பை தொடங்குவார். அதில் கிம் மு-யோல், ஜின் கி-ஜூ, பியோ ஜி-ஹூன் ஆகியோர் பணியாற்றுவார்கள். இவர்கள் அனைவரும் பள்ளியில் உள்ள மாணர்களிடையே இருக்கும் போதை பழக்கம் மற்றும் வன்முறை செயல்களை தடுக்க போராடுவார்கள்.




Also Read… நடிகர்கள் சிவா – ஜெய் வைத்து படம் இயக்க திட்டமிடும் வெங்கட் பிரபு? வைரலாகும் தகவல்
மேலும் மொத்தம் 10 எபிசோடுகளைக் கொண்டு இருந்தாலும் ஒவ்வொரு எபிசோடும் ஒரு கதையை கொண்டு இருப்பதால் பார்வையாளர்களிடையே இந்த தொடர் அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்த தொடரின் இரண்டாம் பாகமும் விரைவில் வரும் என்று இயக்குநர் கூறியது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.