Engal Thangam: 2 வருடத்திற்கு பின் ரீ என்ட்ரி.. சமந்தாவின் எங்கள் தங்கம் படம் வெற்றியானதா? இல்லையா?- விமர்சனங்கள் இதோ!
Engal Thangam Review: தென்னிந்திய மக்கள் மத்தியில் எப்போதும் பிரபலமான நாயகியாக இருந்துவருபவர் சமந்தா ரூத் பிரபு. இவர் முழுக்க முழுக்க ஆக்ஷன் கதைக்களத்தில் நடித்துள்ள புதிய படம்தான் எங்கள் தங்கம் (மா இன்டி பங்காரம்). இன்று (19/06/2026) திரையரங்குகளில் இப்படம் வெளியாகியுள்ள நிலையில், அதன் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்.
தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவந்தவர் சமந்தா ரூத் பிரபு (Samantha Ruth Prabhu). இவர் சில உடல்நல பிரச்சனையின் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பெரிதாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. ஆனாலும் அவர் தயாரித்திருந்த படம் ஒன்றில் கேமியோ வேடத்தில் நடித்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருந்தார். மேலும் இவர் தனது உடல்நல பிரச்சனைக்கு முன்பே ஒப்பந்தமான திரைப்படம்தான் “மா இன்டி பங்காரம்” (Maa Inti Bangaaram). தமிழில் இப்படத்திற்கு “எங்கள் தங்கம்” (Engal Thangam) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சமந்தா ரூத் பிரபு கதாநாயகியாக நடிக்க, தெலுங்கு பிரபல இயக்குநர் நந்தினி ரெட்டி (Nadhini Reddy) இயக்கியுள்ளார். இதை சமந்தாவின் ட்ராலலா மொத்த பிக்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் (Santhosh Narayanan) இசையமைத்துள்ளார்.
இப்படமானது அதிரடி ஆக்ஷன் மற்றும் குடும்ப பொழுதுபோக்கு கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், இன்று 2026ம் ஆண்டு ஜூன் 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இப்படம் எப்படி இருக்கு, திரையரங்குகள் சென்று பார்க்கலாமா? என படத்திற்கான விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம்.




இதையும் படிங்க: ஜித்து மாதவன் எழுத்தில் சிதம்பரம் இயக்கத்தில் எப்படி இருக்கு பாலன் தி பாய் படம்? விமர்சனம் இதோ
சமந்தாவின் எங்கள் தங்கம் படம் எப்படி இருக்கு:
சமந்தாவின் நடிப்பில் வெளியாகியிருக்கும் எங்கள் தங்கம் படமானது கொஞ்சம் பரிட்சயமான கதைக்களத்தில் உள்ளதாம். இப்படத்தின் முதல் பாதியை ஒப்பிடும்போது, இரண்டாம் பாதி விறுவிறுப்பாக உள்ளது. இப்படத்தில் பலவீனமான வில்லன் அம்சம் மற்றும் ஈர்க்கும் தருணங்கள் இல்லாதது ஆகியவை படத்தில் தொடர்ந்து ஈடுபாடு கொள்ளச் க்ஷதமாக இருக்கிறது. மேலும் குடும்ப பொழுதுபோக்கு, ஆக்ஷன் மற்றும் காமெடி கதைக்களங்களில் இப்படம் உருவாகியிருக்கிறது.
எங்கள் தங்கம் படம் குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:
#MaaIntiBangaaram Familiar Story, Boring Execution!
A familiar and predictable story narrated in a very flat manner from start to finish. While the second half picks up compared to the first, the ineffective backstory, weak villain thread, and lack of engaging moments make it…
— Venky Reviews (@venkyreviews) June 18, 2026
எங்கள் தங்கம் படத்தில் சமந்தாவின் நடிப்பு மிரட்டியதா:
சமந்தா தனது பாத்திரத்தில் நேர்த்தியாக நடித்துள்ளார், மேலும் ஆங்காங்கே வரும் சில நுட்பமான நகைச்சுவைத் தருணங்கள் இருக்கிறது. இருப்பினும், குறைந்த பின்னணி இசையும், உத்வேகமற்ற கதைசொல்லலும், ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் ஒரு பெண்ணியம் சார்ந்த கதைக்களம் கொண்ட படம் என்பதால் இப்படத்தின் மீட்டது எதிர்பார்ப்புகளும் அதிகமாக உள்ளது.
இதையும் படிங்க: பிச்சைக்காரன் பட கூட்டணி நூறு சாமி படத்திலும் வெற்றிப் பெற்றதா? மக்களின் கருத்து இதோ
எங்கள் தங்கம் திரைப்படத்தை திரையரங்கு சென்று பார்க்கலாமா:
இப்படமானது சமந்தாவின் 2 ஆண்டுகள் தவத்திற்கு பின் உருவாகியுள்ள, ஒரு அற்புதமான படம் என கூறலாம். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிகம் பாசிட்டிவ் விமர்சனங்களே இருந்துவருகிறது. இப்படமானது ஆக்ஷன், பேமிலி பொழுதுபோக்கு மற்றும் சிறப்பான நகைச்சுவை போன்ற கதையில் உருவாகியுள்ளது. நகைச்சுவை மற்றும் சமந்தா ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான படமாக இது இருக்கும். பேமிலியுடன் திரையரங்கில் ஒரு முறை பார்க்கும் ஒரு நல்ல படமாக இது இருக்கிறது.