மோகன்தாஸ் படத்திற்கு என்னதான் ஆச்சு? நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம்
Vishnu Vishal talks about Mohandas Movie | தமிழ் சினிமாவில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி தற்போது திரையரங்குகளில் வெளியாகாமல் உள்ள மோகன்தாஸ் படம் குறித்து அவர் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்ததாக கட்டா குஸ்தி 2 என்ற படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றியைப் பெற்ற நிலையில் தற்போது இரண்டாம் பாகமும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெறும் என்று படக்குழுவினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தப் படம் வருகின்ற ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.
மேலும் படத்தின் சிங்கிள் போஸ்டர் என தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில் படக்குழுவினரும் பேட்டி அளித்து வருகின்றனர். அப்படி நடிகர் விஷ்ணு விஷால் அளித்தப் பேட்டி ஒன்றில் முன்னதாக அவரது நடிப்பில் உருவாகி திரையரங்குகளில் வெளியாகாமல் உள்ள படங்கள் குறித்து வெளிப்படையாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




மோகன்தாஸ் படத்திற்கு என்னதான் ஆச்சு?
உங்கள் ‘மோகன்தாஸ்’ திரைப்படம் எப்போதோ அறிவிக்கப்பட்டது, ஆனால் இன்னும் வெளியாகவில்லை. அந்தப் படத்திற்கு என்ன ஆனது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகர் விஷ்ணு விஷால் நாங்கள் ‘மோகன்தாஸ்’ படத்தை கோவிட்-19 காலகட்டத்தில், குறிப்பாக ஓடிடியில் வெளியிடுவதற்காகவே உருவாக்கினோம். ஆனால் கோவிட்-19 சூழல் முடிந்து நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பியது. இப்படம் இப்போது வெளியானாலும் நன்றாகவே ஓடும். இருப்பினும், இது ஓடிடியில் மட்டுமே வெளியாக வேண்டும் என்று அவர் தெரிவித்தார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… ஜித்து மாதவன் எழுத்தில் சிதம்பரம் இயக்கத்தில் எப்படி இருக்கு பாலன் தி பாய் படம்? விமர்சனம் இதோ
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Question: Your film #Mohandas was announced long ago but is still not released. What happened to the film?#Vishnuvishal: We made Mohandas during COVID-19, specifically for OTT release. But after COVID-19 ended, things returned to normal. Even if the film releases now, it will… pic.twitter.com/jVphSwNdXB
— Movie Tamil (@_MovieTamil) June 17, 2026
Also Read… Vekkai: நைட்டு நிலா.. ஜி.வி.பிரகாஷின் வெக்கை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!