அக்கரைச் சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி – 16 ஆண்டுகளைக் கடந்தது ராவணன் படம்!
16 Years Of Raavanan Movie | தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் ராவணன். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி 16 ஆண்டுகள் நிறைவடைந்ததை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய அளவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் மணிரத்னம். இவரது இயக்கத்தில் எந்த மொழியில் படம் வெளியானாலும் அது பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன்படி இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் ராவணன். கடந்த 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது ராவணன் படம். ஆக்ஷன் அட்வென்சர் பாணியில் வெளியனா இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தில் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதன்படி நடிகர் விக்ரம் இந்தப் படத்தில் நாயகனாக நடித்து இருந்த நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் ஐஸ்வர்யா ராய் பச்சன், பிருத்விராஜ், கார்த்திக், பிரபு, பிரியாமணி, ஜான் விஜய், முன்னா, வையாபுரி, ரஞ்சிதா, அஷ்வந்த் திலக், அழகம் பெருமாள், ஸ்டான்லி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன், சரவண சுப்பையா மற்றும் சாம்ஸ் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




16 ஆண்டுகளைக் கடந்தது ராவணன் படம்:
விக்ரம் பழங்குடியினரின் உரிமைக்காக போராடும் நபராக உள்ளார். அதே நேரத்தில் நேர்மையான காவல்துறை அதிகாரியாக உள்ள பிரித்வி விக்ரமை அளிக்க நினைக்கிறார். இந்த போராட்டத்தில் விக்ரமின் தங்கை பிரியாமணி கொல்லப்படுகிறார். அதற்கு பழிவாங்க நினைக்கும் விக்ரம் என்ன செய்கிறார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது 16 ஆண்டுகளை நிறைவு செய்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Also Read… வரலாறு திரும்புகிறது… மகனை நாயகனாக்கும் தனுஷ்? வைரலாகும் தகவல்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
June 18th #16YearsOfRavanan #Ravanan#ChiyaanVikram #ARRahman #Maniratnam #AishwaryaRai@chiyaan pic.twitter.com/eOSfES5O0f
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) June 17, 2026
Also Read… பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தும் ராம் சரணின் பெத்தி படம் – உலக அளவில் 400 கோடிகளை கடந்து சாதனை