இரண்டு வானம் படம் பார்த்து அழுதுவிட்டேன் – நடிகர் விஷ்ணு விஷால்
Vishnu Vishal talks about Irandu Vaanam movie | தமிழ் சினிமாவில் பிரபல நாயகனாக உள்ள நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் இரண்டு வானம் படம் குறித்து எமோஷ்னலாக பேசியது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பிரபல நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் கட்டா குஸ்தி 2. இந்தப் படம் வருகின்ற ஜூலை மாதம் 04-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. மேலும் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் விஷ்ணு விஷால் அளித்தப் பேட்டியில் அவரது நடிப்பில் உருவாகி வெளியாக உள்ள இரண்டு வானம் படம் குறித்து பேசியுள்ளார்.
மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்து உள்ளார். படம் தொடர்பான டீசர் மற்றும் அப்டேட்களும் வெளியாகி ரசிகர்களிடையே படம் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இந்தப் படத்தைப் பார்த்த பிறகு தனக்கு என்ன தோன்றியது என்று விஷ்ணு விஷால் வெளிப்படையாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




இரண்டு வானம் படம் பார்த்து அழுதுவிட்டேன்:
சமீபத்தில் இரண்டு வானம் படத்தின் காட்சிகளைப் பார்த்தபோது நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அழுதேன். ராம் குமார் இயக்கத்தில் உருவான இப்படத்திற்காக நான் மூன்று ஆண்டுகள் கடுமையாக உழைத்திருந்ததால், அதைப் பார்க்கும்போது அந்த உணர்வுகள் என்னை மிகவும் நெகிழ வைத்தன. ரசிகர்கள் இப்படத்தைப் பார்க்கும்போது, அந்த வலி, அன்பு மற்றும் உணர்ச்சிகளை அவர்களும் நிச்சயம் உணர்வார்கள், என்று விஷ்ணு விஷால் கூறினார்.
Also Read… ஓம் படத்தின் கதையை சொல்ல மம்முட்டியை 7 மாதங்களாக பின்தொடர்ந்தேன் – ராஜ்குமார் பெரியசாமி
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#VishnuVishal:
“I have watched the output of #IranduVaanam recently & I have cried a lot✨. While watching i felt so much touching, as I worked in the film for 3 Years & put on lot of Hardwork♥️, directed by Ramkumar. When audience watches the film, they’ll also feel that Pain,… pic.twitter.com/XdjjfaJSmH— AmuthaBharathi (@CinemaWithAB) June 19, 2026
Also Read… மோகன்தாஸ் படத்திற்கு என்னதான் ஆச்சு? நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம்