AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சினிமாவில் 23 ஆண்டுகளைக் கடந்த ரவி மோகன் – கொண்டாடும் திரையுலகினர்

23 Years Of Ravi Mohan In Tamil Cinema | தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் ரவி மோகன். இவர் சினிமாவில் நடிக்கத் தொடங்கி 23 ஆண்டுகளைக் கடந்துள்ளதை திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சினிமாவில் 23 ஆண்டுகளைக் கடந்த ரவி மோகன் – கொண்டாடும் திரையுலகினர்
ரவி மோகன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Jun 2026 17:57 PM IST

மூத்த திரைப்படத் தொகுப்பாளர் மோகனின் இளைய மகன் தான் நடிகர் ரவி மோகன். இவரை முன்னதாக திரைத்துறையில் மற்றும் ரசிகர்கள் ஜெயம் ரவி என்று அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது. சினிமா குடும்பத்தைச் சேர்ந்த ரவி மோகன் சிறு வயதிலேயே தெலுங்கு மொழியில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார். அதனைத் தொடர்ந்து தனது அண்ணன் மோகன் ராஜாவின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் கடந்த 2003-ம் ஆண்டும் ஜூன் மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ஜெயம் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். இவர் நாயகனாக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர் ரவி மோகன் நடிப்பில் வெளியான படங்கள் பெரும்பாலும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து சினிமாவில் நாயகனாக வலம் வந்த நடிகர் ரவி மோகன் தற்போது தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் என இரண்டு புது அவதாரங்களையும் எடுத்து உள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி படங்களை தயாரித்து வருகிறார். மேலும் நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் அன் ஆர்டினரி மேன் என்ற படத்தை இயக்கியும் வருகிறார்.

சினிமாவில் 23 ஆண்டுகளைக் கடந்த ரவிமோகன்:

இந்த நிலையில் நடிகர் ரவி மோகன் திரைத்துறையில் நாயகனாக அறிமுகம் ஆகி தற்போது 23 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் நடிகர் ரவி மோகன் தற்போது நடித்து வரும் படங்களின் படக்குழுவினரும் தங்களது வாழ்த்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ஜீனி படக்குழுவினர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… தங்களது மகளின் முகத்தை வெளிப்படுத்திய ராம் சரண் – உபாசனா தம்பதி… உற்சாகத்தில் ரசிகர்கள்

கராத்தே பாபு படக்குழுவினர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Shruti Haasan: நான்தான் பவழ மல்லி-னு எப்படி கண்டுபிடிசீங்க.. ஓஜி பவழ மல்லி வெளியிட்ட வீடியோ வைரல்!

Follow Us