Shruti Haasan: நான்தான் பவழ மல்லி-னு எப்படி கண்டுபிடிசீங்க.. ஓஜி பவழ மல்லி வெளியிட்ட வீடியோ வைரல்!
Shruti Haasan Instagram Reel: தென்னிந்திய சினிமாவில் பல உச்ச நடிகர்களுடன் ஜோடியாக நடித்து, ஹிட் படங்களை கொடுத்திருப்பவர் ஸ்ருதிஹாசன். இவர் சமீபத்தில் சாய் அபயங்கரின் இசையமைப்பில் பவழ மல்லி என்ற இன்டீ பாடலையும் பாடியிருந்தார். இப்பாடலை குறித்து சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டிங் வீடியோ வெளியாகிவரும் நிலையில், அதை ஸ்ருதிஹாசன் ரீகிரியேட் செய்துள்ளார்.
நடிகை ஸ்ருதிஹாசன் (Shruti Haasan) தென்னிந்திய மக்கள் மத்தியில் சிறப்பான நாயகியாக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் இதுவரை பல படங்கள் தென்னிந்திய மொழிகளில் வெளியாகியிருக்கிறது. இவர் இறுதியாக லோகேஷ் கனகராஜின் (Lokesh Kanagaraj) இயக்கத்தில் வெளியான கூலி (Coolie) என்ற படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக நடித்திருந்தார். இதையடுத்து தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி நடித்துவருகிறார். மேலும் சமீபத்தில் ராம் சரணின் (Ram Charan) பெத்தி (Peddi) என்ற படத்தில் அவருடன் இணைந்து சிறப்பு பாடல் ஒன்றில் நடனமாடியிருந்தார். இப்படலானது அவரின் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இவர் சலார் 2 படத்திலும் பிரபாஸுடன் நடிக்கவுள்ளாராம். இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், ஷூட்டிங் 2027ம் ஆண்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சமீபகாலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பவழ மல்லி பாடல் வைரலாகிவருகிறது. அதிலும் ஸ்ருதிஹாசன், தளபதி விஜயுடன் நடித்திருந்த புலி படத்தின் வசனத்துடன் அப்பாடல் வைரலாகிவரும் நிலையில், அதை தற்போது ஸ்ருதிஹாசன் ரீகிரியேட் செய்துள்ளார்.




இதையும் படிங்க: சூர்யா47 படத்தில் மோகன்லால் நடிக்கிறாரா? இயக்குநர் கொடுத்த நியூ அப்டேட்!
ஸ்ருதி ஹாசன் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வைரல் வீடியோ பதிவு:
View this post on Instagram
இந்த வீடியோவில் ஸ்ருதிஹாசன், புலி படத்தில் தான பேசியிருந்த, “நான்தான் பவழ மல்லின்னு எப்படி கண்டுபிடிசீங்க?” என்ற வசனத்தை ரீக்ரியேட் செய்துள்ளார். அதில், தனது கண்ணை கொஞ்சம் கோணையாக வைத்து, சிரிப்பூட்டும் விதமாக இந்த வீடியோவை அவர் வெளியிட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: விஷாலின் மகுடம் திரைப்பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘ரைஸ் ஆப் லிங்கா’ வெளியானது!
இவர்தான் ஓஜி பவழ மல்லி என்ற நிலையில், அவரே இவ்வாறு காமெடியாக வீடியோவை வெளியிட்டிருக்கிறார் என அவரின் ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை வீடியோவின் கேளே தெரிவித்துள்ளனர்.
புலி படத்தில் பவழ மல்லியாக ஸ்ருதிஹாசன்:
இயக்குநர் சிம்பு தேவன் இயக்கத்தில் 2015ம் ஆண்டில் வெளியான படம்தான் புலி. இதில் தளபதி விஜய் நாயகனாக நடிக்க, அவருடன் ஸ்ருதிஹாசன் மற்றும் ஹன்சிகா அபோன்ற நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் மறைந்த நடிகை ஸ்ரீதேவி இப்படத்தில் மிக முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். இதில் நடிகை ஸ்ருதிஹாசன் பவழ மல்லி என்ற வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். மேலும் ஐந்தில் அவர் பேசிய வசனம் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.