Jithu Madhavan: சூர்யா47 படத்தில் மோகன்லால் நடிக்கிறாரா? இயக்குநர் கொடுத்த நியூ அப்டேட்!
Jithu Madhavan About Suriya47 : தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் தனது நடிப்பின் மூலம் தற்போதுவரை பிரபலமான இருந்துவரும் நாயகன் சூர்யா. இவர் ஆவேசம் பட இயக்குநர் ஜித்து மாதவனின் இயக்கத்தில் சூர்யா47 என்ற படத்தில் நடிக்கிறார். இதில் மோகன்லால் இருக்கிறாரா? என்பது குறித்து இயக்குநர் அப்டேட் கொடுத்துள்ளார்.
மலையாளம் சினிமாவில் ஆவேசம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜித்து மாதவன் (Jithu Madhavan). ஃபஹத் பாசில் (Fahadh Faasil) நடித்திருந்த இப்படமானது கடந்த 2024ம் ஆண்டில் வெளியாகியிருந்த இப்படமான்ஸ் இறப்பான் வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து இவர் இணைந்துள்ள புது திரைப்படமே சூர்யா47 (Suriya47). இதில் கோலிவுட் சினிமாவின் தி ஒன் சூர்யா (The One Suriya) நாயகனாக நடித்துவரும் நிலையில், அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை நஸ்ரியா நசீம் (Nazriya Nazim) நடித்துவருகிறார். தமிழ் மற்றும் மலையாளம் மொழியை மையமாக கொண்டு இயக்கப்பட்டுவரும் இப்படத்தில், சூர்யா திறடி போலீஸ் அதிகாரியாக நடித்துவருகிறார்.
இதன் ஷூட்டிங் கேரளத்தில் நடைபெற்றுவரும் நிலையில், இன்னும் சில நாட்களில் ஷூட்டிங் நிறைவடையவுள்ளதாம். அந்த வகையில் அண்மையில் வீடியோ ஒன்றில் பேசியிருந்த இயக்குநர் ஜித்து மாதவன், சூர்யா47 படம் பற்றியும், அதில் மோகன்லால் (Mohanlal) நடிக்கிறாரா? என்பது குறித்து அப்டேட் கொடுத்திருக்கிறார்.




இதையும் படிங்க: ஸ்வாசிகாவிற்கு இந்தியன் ஆஸ்கார் அவார்ட் கொடுக்கலாம்.. டப்பா எதுவும் இருக்கா! – கலகலப்பாக பேசிய விஜய் ஆண்டனி!
சூர்யா47 படத்தில் மோகன்லால் நடிக்கிறாரா என்பது பற்றி தகவலை பகிர்ந்த ஜித்து மாதவன்:
அந்த வீடியோவில் பேசிய ஜித்து மாதவன், “தற்போதுவரை இப்படத்தின் அப்டேட்டுகளை வெளிப்படுத்துவதற்கான நேரம் வரவில்லை. படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுவருகிறது. இன்னும் சில நாட்கள் மீதமுள்ளது. அதுவும் விரைவில் முடிவடையும் என நினைக்கிறன்.சரியான நேரம் வரும்போது இப்படத்தின் புதிய அப்டேட்டுகளை நாங்கள் கொடுப்போம்.
இதையும் படிங்க: ஓம் படத்தின் கதையை சொல்ல மம்முட்டியை 7 மாதங்களாக பின்தொடர்ந்தேன் – ராஜ்குமார் பெரியசாமி
நிச்சயமாக மக்களுக்கு இப்படமானது பிடிக்கும் என நம்புகிறேன். இப்படத்தில் மோகன்லால் இல்லை. நாங்கள் இன்னும் ஒரு போஸ்டரைக் கூட வெளியிடவில்லை. முதலில் புதிய தகவல்கள் வரட்டும்” என அதில் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் சூர்யாவின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா47 படம் பற்றி இயக்குநர் ஜித்து மாதவன் பேசியது தொடர்பாக வைரலாகும் எக்ஸ் பதிவு:
#JithuMadhavan about #Suriya47:
“Currently, the time has not come for the updates. Shooting is going on. We have a few days of shooting pending and it is about to be completed. We’ll give the update when the time comes. I believe people will like the film. Lalettan is not in the… pic.twitter.com/INM6Rfjdga
— Laxmi Kanth (@iammoviebuff007) June 20, 2026
இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், விரைவில் நிறைவடையவுள்ளது. இதையடுத்து சூர்யா, இயக்குநர் ஞானவேல் ராஜாவின் இயக்கத்தில் சூர்யா48 படத்தில் இணைகிறாராம். இப்படத்தின் அறிவிப்புக்களை வரும் 2026ம் ஆண்டு ஜூலை 23ம் தேதியில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதே தேதியில் சூர்யாவின் புதிய படங்களின் அப்பேடுகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.