விரைவில் வெளியாகும் அஜித் குமார் 64 படத்தின் அப்டேட் – வைரலாகும் தகவல்
Ajith Kumars 64th film update | நடிகர் அஜித் குமார் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படத்திற்கு தற்காலிகமாக அஜித் குமார் 64 என்று அழைக்கப்படுகின்றது. இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தமிழ் சினிமாகுழந்தை நட்சத்திரமாக ஒரே ஒரு படத்தில் நடித்த இவர் பிறகு நாயகனாக நடிக்கத் தொடங்கினர். சினிமாவில் எந்தவிதமனக சப்போர்ட்டும் இல்லாமல் நேரடியாக சொந்த முயற்சியால் நடிக்கத் தொடங்கி தற்போது உச்ச நடிகராக வலம் வருகிறார் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் தமிழ் மொழியில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் அஜித் குமார் தொடர்ந்து தனது கார் ரேஸிங்கிலும் அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறார்.
அதன்படி உலகம் முழுவதும் பல கார் ரேஸ் பந்தையங்களில் தனது அணியினர் உடன் இந்தியாவிற்காக போட்டியிட்டு பல வெற்றிகளையும் குவித்து வருகிறார் நடிகர் அஜித் குமார். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.




விரைவில் வெளியாகும் அஜித் குமார் 64 படத்தின் அப்டேட்:
அதன்படி நடிகர் அஜித் குமார் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்ற குட் பேட் அக்லி படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியாக உள்ள 64-வது படத்தையும் இயக்க உள்ளார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க உள்ளார். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் யார் என்று இதுவரை உறுதி ஆகாத நிலையில் விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… நடிகை மமிதா பர்த்டே ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட விஸ்வநாத் & சன்ஸ் படக்குழு
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
AK 64 Update loading soon 🔥
Production house finalization within this week 👀
Sun Pictures, Hombale Films & other big names in talks…Waiting for the perfect backing for Thala Ajith Kumar
AK’s Box Office potential will roar again
400Cr club loading? 🦁#AK64 #ajithkumar𓃵 pic.twitter.com/f0Ae6wfyyg— Abishek (@AbiShek04213401) June 23, 2026