AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Kayadu Lohar: மஞ்சணத்தி படத்திற்காக மிகவும் உற்சாகமாக இருக்கிறேன் – கயாடு லோஹர்!

Kayadu Lohar About Manjanathi Movie: தற்போது தென்னிந்திய சினிமாவில் சென்சேஷனல் நடிகையாக இருந்துவருபவர் கயாடு லோஹர். இவர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட நிலையில், அதில் அவர் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ள மஞ்சணத்தி படம் பற்றி தெரிவித்துள்ளார்.

Kayadu Lohar: மஞ்சணத்தி படத்திற்காக மிகவும் உற்சாகமாக இருக்கிறேன் – கயாடு லோஹர்!
கயாடு லோஹர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 07 Jul 2026 16:09 PM IST

தமிழ் சினிமாவில் பிரதீப் ரங்கநாதனுக்கு (Pradeep Ranganathan) ஜோடியாக டிராகன் (Dragon) என்ற திரைப்படத்தில் நடித்து, கதாநாயகியாக அறிமுகமானவர் கயாடு லோஹர் (Kayadu Lohar). இவர் இந்தி சினிமாவின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியிருந்த நிலையில், தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய திரைப்படங்களில் நாயகியதாக நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் வெளியீட்டிற்கு தயாராகியிருக்கும் படம் இதயம் முரளி (Idhayam Murali). இதில் அதர்வா (Atharvaa)ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக கயாடு லோஹர் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் (Preity Mukundhan) இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது சிறப்பாக உருவாகியுள்ள நிலையில், 2026ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறது.

அண்மையில் புரோமோஷன் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட கயாடு லோஹர், இயக்குநர் மாரி செல்வராஜின் (Mari Selvaraj) இயக்கத்தில் நடிக்கவுள்ள மஞ்சணத்தி (Manjanathi) படம் பற்றி பேசியுள்ளார். இப்படத்தில் அவர் கதாநாயகியாக நடிக்கவுள்ள நிலையில், அந்த படம் குறித்து தனக்கு தெரிந்ததை பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க :

மஞ்சணத்தி திரைப்படம் குறித்து நடிகை கயாடு லோஹர் பகிர்ந்த விஷயம்:

அண்ட் நேர்காணலில் தொகுப்பாளர் கயாடு லோஹரிடம், “மஞ்சணத்தி படம் குறித்து எதாவது சொல்ல முடியுமா?, படம் எப்படி இருக்கும்?” என கேட்டிருந்தார். அதற்கு பதில் கொடுத்த அவர், “தயாரிப்பு நிறுவனம் சார்பில் எதையும் இன்னும் அறிவிக்கவில்லை. இப்போதைக்கு இந்தத் படம் பற்றி என்னால் எதுவும் பேசமுடியாது. ஆனால், அந்த படத்தில் நடிப்பதற்காக நானா உற்சாகமாக இருக்கிறேன். நான் முன்பே மாரிசெல்வராஜ் சாருடன் பணியாற்ற விரும்பினேன்” என அதில் கயாடு லோஹர் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: தமிழ் திரைப்பட விநியோகஸ்தரர்களை சந்தித்த ஜன நாயகன் பட தயாரிப்பு நிறுவனம்.. என்ன நடந்தது தெரியுமா?

மஞ்சணத்தி திரைப்படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த மஞ்சணத்தி படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்க, அவரின் தயாரிப்பு நிறுவனமே இதை தயாரிக்கிறதாம். இதுவரை இவர் இயக்கிய படங்கள் முழுக்க ஒரு ஆணின் கதையை மையமாக எடுக்கப்பட்டது. அந்த விதத்தில் மஞ்சணத்தி படமானது பெண்களின் கதையை மையப்படுத்தி இயக்கப்படவுள்ளதாம். இப்படத்தில் மாரி செல்வராஜ் தனது தாயின் வாழ்க்கையை குறித்த கதையை காண்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஸ்டைலான தோற்றம் இருக்கும் – தயாரிப்பாளர் நாக வம்சி பேச்சு!

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கும் நிலையில், வரும் 2027ம் ஆண்டில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் ஆரம்பமாகவில்லை. இதில் கயாடு லோஹர், பிரியங்கா மோகன் மற்றும் கதிர் உள்ளிட்ட பிரபலங்களும் இணைந்து நடிக்கவுள்ளார்களாம். நிச்சயம் இப்படமும் மாரி செல்வராஜிற்கு நல்ல வரவேற்பை கொடுக்கும் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

Follow Us