AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

H Vinoth: தயாரிப்பாளராக அறிமுகமான ஜன நாயகன் பட இயக்குநர் எச்.வினோத்..!

Almost Nallavan movie Shooting Pooja: தமிழில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் எச்.வினோத். இவர் இயக்குநராக படங்களை இயக்கிவரும் நிலையில், தற்போது தயாரிப்பாளாராக புது படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் தொடங்கியுள்ள நிலையில், அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

H Vinoth: தயாரிப்பாளராக அறிமுகமான ஜன நாயகன் பட இயக்குநர் எச்.வினோத்..!
ஆல்மோஸ்ட் நல்லவன் திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 07 Jul 2026 18:53 PM IST

தமிழில் சதுரங்க வேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக நுழைந்தவர் எச்.வினோத் (H Vinoth). இவர் தமிழில் அஜித் குமார் (Ajith Kumar) முதல் தளபதி விஜய் (Thalapathy Vijay) போன்ற பிரபலங்களின் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அந்த விதத்தில் தளபதி விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் (Jana Nayagan) படத்தையும் இவரே இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது அதிரடி ஆக்ஷன் மற்றும் அரசியல் கதைக்களத்தில் தயாராகியிருக்கும் நிலையில், இன்னும் வெளியிடப்படவில்லை. அந்த விதத்தில் விரைவில் சென்சார் கிடைத்து இப்படம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் இயக்குநராக படங்களை இயக்கிய எச். வினோத், தற்போது தயாரிப்பாளராக படத்தை தயாரிக்கவுள்ளார். இவர் தயாரிக்கும் படத்தை பிக் பாஸ் பிரபலம் ராஜு ஜெயமோகன் (Raju Jeyamohan) இயக்கி, அதில் அவர் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம். இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் தொடங்கியுள்ள நிலையில், இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: சோஷியல் மீடியாவிலிருந்து ஸ்மால் பிரேக் எடுப்பதாக அறிவித்த மமிதா பைஜூ!

ஜன நாயகன் பட இயக்குநர் எச்.வினோத் தயாரிக்கும் புது படத்தின் ஷூட்டிங் பூஜை குறித்த புகைப்பட பதிவு:

இயக்குனர் எச் வினோத் தயாரிக்க, ராஜு ஜெயமோகன் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு ஆல்மோஸ்ட் நல்லவன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் ராஜு ஜெயமோகனுடன் சத்யராஜ், துஷாரா விஜயன் மற்றும் அமரன் பட பிரபல நடிகர் உள்ளிட்ட நடிகர்கள் இணைந்து நடிக்கவுள்ளார்களாம். இப்படத்தின் மூலம் நடிகர் ராஜு ஜெயமோகன் இயக்குனராக அறிமுகமாகும் நிலையில், நிச்சயம் இப்படம் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: உங்கள் அனைவரிடமும் மண்டியிட்டு மன்னிப்பு கோருகிறேன் – எமோஷ்னலாக பேசிய ரவி மோகன்

யார் இந்த ராஜு ஜெயமோகன் :

தமிழில் சின்னத்திரை சீரியல்களில் நடிகராக இருந்து, தற்போது சினிமாவில் நடிகராக பிரபலமாகியவர் ராஜு ஜெயமோகன். இவர் இறுதியாக பன் பட்டர் ஜாம் என்ற படத்தின் நடித்திருந்த நிலையில், அது நல்ல வரவேற்பை பெற்றது. இவர் பிக் பாஸ் சீசன் 6 தமிழ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் மேலும், குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் விண்ணாரும் கூட. இவ்வாறு சின்னத்திரை மற்றும் சினிமாவில் தனது ஈடுபாட்டை காட்டிவரும் நிலையில், தற்போது இவர், இயக்குநர் எச். வினோத் தயாரிப்பில், இயக்குநராக ஆல்மோஸ்ட் நல்லவன் என்ற படத்தை இயக்கி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us