H Vinoth: சினிமாவில் தயாரிப்பாளராக புது அவதாரம் எடுக்கும் எச்.வினோத்?
H. Vinoth Turns Producer: தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் எச்.வினோத். இவர் இறுதியாக தளபதி விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தை இயக்கியிருந்த நிலையில், இன்னும் இது வெளியாகவில்லை. அந்த வகையில் தற்போது இவர் தயாரிப்பாளராக புதிய அவதார எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது.
கோலிவுட் சினிமாவில் பிரபலமான மற்றும் மக்களுக்கு நெருக்கமான இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் எச்.வினோத் (H Vinoth). இவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்டமான மற்றும் வித்தியாசமான கதைகளை படமாக இயக்கி மக்களுக்கு கொண்டுசேர்த்தவர் இவர். இயக்குநர் எச்.வினோத் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் அஜித் குமார் (Ajith Kumar) போன்ற பல்வேறு பிரபலங்களுடன் படங்களில் பணியாற்றியுள்ளார். அதிலும் அஜித் குமாரை வைத்து வலிமை மற்றும் துணிவு என இரு படங்களை அடுத்தடுத்து இயக்கி ஹிட் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் இறுதியக இயக்கியிரிருந்த படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இதில் முதல்வர் விஜய் நாயகனாக நடித்திருந்த நிலையில், சில சென்சார் பிரச்சனையின் காரணமாக இன்னும் அந்த படமானது வெளியாகாமல் உள்ளது.
இப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகே எச்.வினோத் புதிய படத்தை இயக்குவார் என கூறப்பட்டிருந்த நிலையில், சினிமாவில் தற்போது புதிய அவதாரத்தை எச் வினோத் எடுக்கவுள்ளாராம். இயக்குநராக படங்களை இயக்கிய இவர், தயாரிப்பாளராக புதிய படங்களை உருவாக்கவுள்ளாராம். தற்போது இது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: சூர்யா சார் அதைச் செய்ய நான்தான் வற்புறுத்தினேன் – கருப்பு படத்தின் வைரல் டயலாக் குறித்து பேசிய ஆர்.ஜே.பாலாஜி
தயாரிப்பாளராக புதிய அவதாரத்தை எடுக்கும் இயக்குநர் எச்.வினோத்:
இயக்குநர் எச். வினோத், இயக்குநராக பல பிரம்மாண்டமான படங்களை இயக்கியிருக்கிறார். அந்த வகையில் இவர் தற்போது தயாரிப்பாளராகவும் புதிய அவதாரத்தை எடுக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இவர் தயாரிக்கவுள்ள முதல் படத்தை அவரின் உதவி இயக்குநர் இயக்கவுள்ளதாகவும், அதில் நடிகர் நட்டி நடராஜன் நாயகனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படமானது சிறிய பட்ஜெட்டில் உருவாகும் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இணையத்தில் வைரலாகும் கான் சிட்டி படத்திலிருந்து வெளியான ஃப்ராடு பயலே பாடல்
எச். வினோத் தயாரிக்கும் புதிய திரைப்படம் குறித்து வைரலாகும் பதிவு:
Director #HVinoth, who directed #JanaNayagan, is set to make his debut as a producer. The project will be directed by one of his former assistant directors, with #Natty playing the lead role. pic.twitter.com/Fa9B6WUNfk
— Movie Tamil (@_MovieTamil) May 30, 2026
இயக்குநர் எச்.வினோத், 2014ம் ஆண்டில் வெளியான சதுரங்க வேட்டை என்ற படத்தின் மூலம் இயக்குநராக நுழைந்தார். இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுக்க அடுத்தடுத்து படங்களை இயக்க தொடங்கினார். இவ்வாறு எச்.வினோத் நட்டி நடராஜை வைத்து முதல் படத்தை இயக்கி ஹிட் கொடுத்த நிலையில், அதே போலவே அவரின் உதவி இயக்குநரும் நட்டி நடராஜை வைத்து முதல் படத்தை இயக்கவுள்ளாராம். இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.