Pushpa 3: புஷ்பா 3 படத்தில் நான் இருக்கிறேன்.. படம் உருவாகுவதை உறுதி செய்த நடிகர் ஜெகபதி பாபு!
Jagapathi Babu Confirms Pushpa 3 Role: தெலுங்கு நாயகன் அல்லு அர்ஜுனின் நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த படம் புஷ்பா 2. இப்படத்தில் அமைச்சர் கோகதம் வீர பிரதாப் ரெட்டி என்ற வேடத்தில் ரசிகர்களை ஈர்த்தவர் நடிகர் ஜெகபதி பாபு. சமீபத்தில் பேசிய பேட்டி ஒன்றில், புஷ்பா 3 படத்தில் தனது கதாபாத்திரம் இருப்பதாக உறுதி செய்துள்ளார்.
டோலிவுட் சினிமாவில் கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் வெளியாகி அதிகம் வசூல் செய்து பிரம்மாண்ட சாதனை படைத்த திரைப்படம்தான் புஷ்பா 2 (Pushpa 2). இதில் நடிகர் அல்லு அர்ஜுன் (Allu Arjun) நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) நடித்திருந்தார். இப்படம் 2021ம் ஆண்டில் வெளியான புஷ்பா 1: தி ரைஸ் படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இந்த புஷ்பா 2 படமானது 2024ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. அதிரடி ஆக்ஷன், கமர்ஷியல் மற்றும் பேமிலி பொழுதுபோக்கு போன்ற ஆக்ஷன் படமாக வெளியாகியிருந்த நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்திற்கு பிறகு புஷ்பா 3 (Pushpa 3) படமானது உருவாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், அல்லு அர்ஜுன் தற்போது ராக்கா (Raaka) மற்றும் AA23 போன்ற படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். அந்த வகையில் புஷ்பா 3 படமானது எப்போது உருவாகும் என உறுதியாக தெரியவில்லை.
அந்த வகையில் இப்படத்தில் “அமைச்சர் கோகதம் வீர பிரதாப் ரெட்டி” என்ற வேடத்தில் நடித்து மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ஜெகபதி பாபு (Jagapathi Babu). அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், புஷ்பா 3 படத்தில் நடிப்பதை உறுதிசெய்துள்ளார். மேலும் அது குறித்து விளக்கமாக பேசியுள்ளார்.




இதையும் படிங்க: டாக்ஸிக் படத்தை பார்த்தபிறகு உங்கள் எண்ணம் மாறிவிடும் – கியாரா அத்வானி
புஷ்பா 3 படம் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகர் ஜெகபதி பாபு:
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஜெகபதி பாபு, “புஷ்பா படத்தின் நீளம் காரணமாக என் கதாபாத்திரம் குறைக்கப்பட்டது. ஆரம்பத்தில், புஷ்பா 2 மற்றும் புஷ்பா 3 ஒரு முழுமையான கதையாக இருந்தது, ஆனால் படத்தின் நீளம் காரணமாக, அதை 2 பாகங்களாகப் பிரித்தார்கள். நான் புஷ்பா 3 படத்தில் இருக்கிறேன், இந்த முறை, நான் ஒப்பனை செய்யும்போது, மொட்டை அடிக்க வேண்டியிருக்கும்.
இதையும் படிங்க: நான் டான்ஸ் மாஸ்டர் ஆக முக்கிய காரணம் சிம்பு சார் தான் – டான்ஸ் மாஸ்டர் சாண்டி
நான் இயக்குநர் சுகுமார் மீது குற்றம் சாட்ட முடியாது, அவர் எப்போதும் எனக்கு உதவியிருக்கிறார், வேறு எதையும் செய்ததில்லை. புஷ்பா 2 படத்திற்குப் பிறகும், விஷயங்கள் திட்டமிட்டபடி நடக்கவில்லை என்றும், அதை 3வது பாகத்தில் ஈடுசெய்வதாகவும் அவர் கூறினார். அதுவே எனக்குப் போதுமானது. நான் ஒருபோதும் ஒரு இயக்குநரின் சிந்தனை ஓட்டத்தில் தலையிட மாட்டேன்” என அதில் அவர் கூறியுள்ளார்.
புஷ்பா 3 திரைப்படம் குறித்து நடிகர் ஜெகபதி பாபு பேசியது தொடர்பாக வைரலாகும் பதிவு:
#Pushpa – My character got shortened because of the film’s length. Initially, #Pushpa2 and #Pushpa3 were 1 complete story, but due to the runtime, they split it into 2 parts. I am there in the 3rd part, and this time, when I do the make-up, I’ll have to go bald 😀
We shouldn’t… pic.twitter.com/dTy9evflH2
— Movies Singapore (@MoviesSingapore) May 29, 2026
நடிகர் ஜெகபதி பாபுவின் நடிப்பில் பெத்தி படம் உருவாகியுள்ளது. ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் இதில் நடித்துள்ள நிலையில், இப்படம் வரும் 2026 ஜூன் 4ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இதில் ஜெகபதி பாபு ரேம் சரணின் தந்தை வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.