AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நான் டான்ஸ் மாஸ்டர் ஆக முக்கிய காரணம் சிம்பு சார் தான் – டான்ஸ் மாஸ்டர் சாண்டி

Dance Master Sandy Talks About Simbu: தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக பிரபலம் ஆகி தற்போது நடிகராகவும் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் சிம்பு குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நான் டான்ஸ் மாஸ்டர் ஆக முக்கிய காரணம் சிம்பு சார் தான் – டான்ஸ் மாஸ்டர் சாண்டி
சாண்டிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 May 2026 18:19 PM IST

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி டான்ஸ் மாஸ்டராகவும் வலம் வருபவர் சாண்டி மாஸ்டர். இவர் சின்னத்திரையில் வெளியான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே அறிமுகம் ஆனார். இந்த நிகழ்ச்சியில் நடனம் ஆடுவது மட்டும் இன்றி தனது நகைச்சுவையான பேச்சு காரணமாகவும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர் சிம்புவின் நடிப்பில் வெளியான வாலு என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக அறிமுகம் ஆனார் மாஸ்டர் சாண்டி. தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு டான்ஸ் கோரியோ செய்து வந்த இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழ் நாட்டில் உள்ள பட்டித்தொட்டி எங்கும் மக்களிடையே பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான டான்ஸ் மாஸ்டராக வலம் வந்த சாண்டி மாஸ்டர் சமீப காலமாக தொடர்ந்து படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். அதிலும் குறிப்பாக தமிழ் மட்டும் இன்றி மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் படங்களில் வில்லன் கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது பரிமளா அண்ட் கோ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

நான் டான்ஸ் மாஸ்டர் ஆக முக்கிய காரணம் சிம்பு சார் தான்:

சினிமாவில் பிசியான நடன இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வரும் சாண்டி சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வர முக்கிய காரணம் நடிகர் சிலம்பரசன் என்று தெரிவித்துள்ளார். தன் மீது உள்ள பாசம் மற்றும் நம்பிக்கையின் காரணமாக சிம்பு வாலு படத்தில் டான்ஸ் கோரியோ செய்ய தனக்கு வாய்ப்பு கொடுத்ததாக தெரிவித்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Samantha: எனது ரகசிய பெயர்.. எனது கணவரும் அப்டித்தான் கூப்பிடுவாரு – சமந்தா சொன்ன ரகசியம்!

இணையத்தில் வைரலாகும் டான்ஸ் மாஸ்டர் சாண்டி பேச்சு:

Also Read… Dhanush: நான் அதற்காகவே கார்த்தியின் பருத்திவீரன் படத்தை பார்த்தேன் – தனுஷ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

Follow Us