AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

D 55 படத்தில் தனுஷ் சாரின் டான்ஸ் வேற லெவல் – டான்ஸ் மாஸ்டர் சாண்டி

Dance Master Sandy talks about D 55 Movie | தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் தற்போது 55-வது படமாக உருவாகி வரும் படம் குறித்து சாண்டி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

D 55 படத்தில் தனுஷ் சாரின் டான்ஸ் வேற லெவல் – டான்ஸ் மாஸ்டர் சாண்டி
தனுஷ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 May 2026 12:03 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் தொடர்ந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்த 2026-ம் ஆண்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் முதலாவதாக வெளியான படம் கர. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தின் பணிகள் நடைப்பெற்றுக் கொண்டிருந்த போதே தனது 55-வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார் நடிகர் தனுஷ். அதன்படி இந்தப் படத்திற்காக நடிகர் தனுஷ் இயகுநர் ராஜ் குமார் பெரிய சாமி உடன் கூட்டணி வைப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர். மேலும் இந்தப் படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.

இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகர் மம்முட்டி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் அவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஸ்ரீலீலா மற்றும் சாய் பல்லவி நடிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படத்தில் நடிகர் தனுஷின் நடனம் எப்படி இருக்கும் என்பது குறித்து டான்ஸ் மாஸ்டர் சாண்டி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

D 55 படத்தில் தனுஷ் சாரின் டான்ஸ் வேற லெவல்:

அந்தப் பேட்டியில் சாண்டி பேசியதாவது, சமீபத்தில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்திற்காக நாங்கள் ஒரு பாடலை உருவாக்கினோம். அதில் தனுஷ் சார் ஒரு விதமாக மிரட்டிவிட்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அவர் ஒரு முழுப் பாடலுக்கும் நடனமாடியிருக்கிறார். அவருக்கு ஈடுஇணையே இல்லை. அந்தப் பாடல் நிச்சயம் ஒரு அதிரடியாக அமையும். நான் அப்படியே திகைத்துப்போனேன். அவர் பார்ப்பதற்கு மிகவும் அப்பாவியாகவும் மென்மையாகவும் காட்சியளிக்கிறார்.

நமக்கெல்லாம் இது வருமாப்பா?” என்று அவரே என்னிடம் கேட்டார். ஆனால், நான் ‘5, 6, 7, 8…’ என்று எண்ணத் தொடங்கியதும், அவருக்குள் எங்கிருந்து அத்தனை ஆற்றல் வந்தது என்றே எனக்குத் தெரியவில்லை. அந்த அளவுக்கு அவர் டான்ஸ் ஆடினார். அவர் தரையில் மிதந்து பறப்பது போலவே இருந்தது. அந்தப் பாடல் வெளியாகும் போது, ​​நீங்களே அதை நேரில் காண்பீர்கள் என்று சாண்டி தெரிவித்துள்ளார்.

Also Read… தனது 48-வது படத்திற்காக மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் நடிகர் சூர்யா? வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் நடிகர் சாண்டி பேச்சு:

Also Read… ப்ளாஸ்ட் முதல் கட்டாளன் வரை… இந்த வார சினிமாவின் புது வரவுகள் – லிஸ்ட் இதோ

Follow Us