தனுஷ் அடுத்ததாக இயக்க உள்ள படம் இப்படிதான் இருக்குமாம் – வைரலாகும் தகவல்
Dhanush is planning to direct a female-centric film | நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் படங்கள் ரசிகர்களிடையே எந்த அளவிற்கு வரவேற்பைப் பெறுகின்றதோ அதே போல நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியாகும் படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது
தமிழ் சினிமாவில் வரிசையாக படங்களை கொடுத்து வரும் பிசியான நடிகராக வலம் வருகிறார் நடிகர் தனுஷ். இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் இளைய மகனாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன இவர் ஆரம்ப காலக்கட்டத்தில் அவரது உடல் அமைப்பின் காரணமாக பல நெகட்டிவ் விமர்ச்னங்களை எதிர்கொண்டார். இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோவா என்று அவர் காதுபடவே பலரும் பேசியதாக பேட்டிகளில் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த நெகட்டிவான விமர்சனங்களை எல்லாம் புறம் தள்ளி தற்போது இந்திய சினிமாவின் அடையாளமாக ஹாலிவுட் சினிமா ரசிகர்களிடையே வலம் வருகிறார் நடிகர் தனுஷ். இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தெலுங்கு, இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். நடிகராக சினிமாவில் தனது பயணத்தை தொடங்கினாலும் தொடர்ந்து பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் என பல அவதாரங்களை எடுத்துள்ளார் தனுஷ்.
தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகும் படங்களை ரசிகர்கள் எந்த அளவிற்கு கொண்டாடி வருகின்றனரோ அதே அளவிற்கு அவர் எழுதி இயக்கும் படங்களையும் ரசிகர்கள் கொண்டாடத் தவறியதில்லை. தற்போது நடிப்பில் பிசியாக இருக்கும் தனுஷ் அடுத்ததாக இயக்க உள்ள படம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றது.




தனுஷ் அடுத்ததாக இயக்க உள்ள படம் இப்படிதான் இருக்குமாம்:
நடிகை மிருணால் தாகூர் கதாநாயகியாக நடிக்கும், பெண்களை மையமாகக் கொண்ட ஒரு திரைப்படத்தை இயக்க தனுஷ் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன; இப்படம் மிருணால் தாகூரின் முதல் தமிழ்ப் படமாக அமையும். இத்திட்டத்திற்கான புகைப்படப் படப்பிடிப்பு (photoshoot) ஏற்கனவே நிறைவடைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், தனுஷின் தற்போதைய நடிப்புப் பணிகளின் காரணமாக, இப்படம் தற்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது தாற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… அர்ஜுன் தாஸின் கான் சிட்டி படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் கொடுத்த படக்குழு
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Happy News for D Fans 🎉
Reports suggest that #Dhanush is planning to direct a female-centric film starring #MrunalThakur, which would mark her Tamil debut.
A photoshoot for the project has reportedly already been completed. However, due to Dhanush’s current acting commitments,… pic.twitter.com/TeBjRjsJlG
— FilmyBowl Tamil (@FilmyBowlTamil) May 21, 2026
Also Read… கேஜிஎஃப் 3 மற்றும் சலார் 2 திரைப்படங்கள் உருவாகுமா? இயக்குநர் பிரஷாந்த் நீல் சொன்ன விஷயம்!