தனது 48-வது படத்திற்காக மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் நடிகர் சூர்யா? வைரலாகும் தகவல்
Suriya 48 Movie Update | தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் வரிசையாக வெளியாகி வருகின்றது. இந்த நிலையில் அவரது 48-வது படத்தை யார் எழுதி இயக்க உள்ளது என்று தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களிடையே பிரபலமானவராக வலம் வருகிறார் நடிகர் சூர்யா. சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கருப்பு. இந்தப் படம் தமிழ் மொழியில் உருவாகி இருந்தாலும் உலக அளவில் ரசிகர்களிடையே தொடர்ந்து மாபெரும் வரவேற்பைப் பெற்ற் வருகின்றது. மேலும் இந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தமிழகத்தில் மட்டும் மொத்தம் 130 கோடிகள் 10 நாட்களில் வசூலித்ததாக முன்பு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது சினிமா வட்டாரங்களில் வைரலாகும் தகவலின் படி கருப்பு படம் உலக அளவில் இதுவரை 300 கோடிகளை வசூலித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இது சூர்யாவின் நடிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து சூர்யாவின் 46-வது படமான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்தப் படத்தின் டீசர் வெளியான போதே ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது சூர்யா 47 படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படம் 2026-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் சூர்யாவின் நடிப்பில் 48-வதாக உருவாக உள்ள படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.




தனது 48-வது படத்திற்காக மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் சூர்யா:
அந்த வகையில் தற்போது சூர்யா 47-வது படத்தில் பிசியாக நடித்து வரும் நிலையில் அவரது 48-வது படத்திற்கு முன்னதாக கூட்டணி வைத்து ஹிட் அடித்த இயக்குநர் டிஜே ஞானவேல் உடன் மீண்டும் கூட்டணி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி ஜெய் பீம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, டி.ஜே. ஞானவேலும் சூர்யாவும் மீண்டும் இணையவுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
After the success of JaiBhim, T./#JGnanavel and #Suriya are set to reunite once again. The shooting for this film is expected to begin in September. Zhagaram Studios is likely to produce the project. pic.twitter.com/SUqR0JX5Fm
— Movie Tamil (@_MovieTamil) May 27, 2026
Also Read… விஜய் சேதுபதி உடன் கூட்டணி வைக்கும் இயக்குநர் பாலா? வைரலாகும் தகவல்